16 December 2015 9:49 am
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளும் அதில் படிக்கும் சுமார் எழுபதாயிரம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே அதிகாரிகள் இந்த முடிவை எடுத்திருப்பதாக நகர் மேயர் தெரிவித்திருக்கிறார். நியூ யார்க் காவல்துறைக்கும் இப்படியானதொரு அச்சுறுத்தல் வந்தது. ஆனால் அது நம்பத்தகுந்ததல்ல என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். (விடுக்கப்பட்ட அச்சுறுத்தலில்) Allah என்கிற சொல்லின் முதல் எழுத்தில் இருக்கும் A என்கிற பெரிய எழுத்துக்குப்பதிலாக a என்கிற சிறிய எழுத்து உபயோகிக்கப்பட்டிருந்ததாகவும், இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் யாரும் அத்தகையதொரு தவறை செய்யமாட்டார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அருகே இருக்கும் சான் பெர்னார்டினோ பிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தீவிரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம் தம்பதியினர் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பின்னணியில் இன்றைய இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வந்துள்ளன.