பாம்புகளின் நஞ்சை முறிக்க புதிய மருந்து முயற்சி - தமிழ் இலெமுரியா

12 January 2015 11:25 am

சஹாரா பாலைவனப்பகுதிக்கு கீழேயுள்ள நாடுகளில் காணப்படும் அனைத்து விதமான விஷப் பாம்புகளின் கடிகளுக்கும் எதிராக செயல்படக்கூடிய விஷ முறிவு மருந்தொன்றை உருவாக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனின் லிவர்பூலில் உள்ள, வெப்பமண்டலப் பகுதிகளுக்கான மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர்கள் சுமார் 400 விஷப் பாம்புகளின் நஞ்சிலிருந்து புரதங்களை சேகரித்து வருகின்றனர். அதிக வெப்பத்தால் மருந்து கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் புரதங்களுடன் வேறு சில வேதிப் பொருட்களும் சேர்க்கப்பட்டு புதிய மருந்து உருவாக்கப்படும். இந்த மருந்தை உருவாக்குவதற்காக வாரம் தோறும் 80 பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப்படுகிறது. சஹாராகாவுக்கு கீழேயுள்ள பகுதிகளில் ஆண்டுதோரும் 30 ஆயிரம் பேர் பாம்புக் கடிகளினால் உயிரிழக்கின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி