பிரான்சில் இருந்து வரும் ஈழமுரசு நிறுத்தப்படுகின்றது - தமிழ் இலெமுரியா

25 September 2014 1:36 am

மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் இதழ் நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.  இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை.  பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுவதையும் கோபிராஜ் மறுத்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி