பிரிட்டனின் வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை:சிரிய அதிபர் அஸத் - தமிழ் இலெமுரியா

7 December 2015 10:23 am

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் மீது பிரிட்டன் நடத்திய வான் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில், இப்படியான வான் தாக்குதல்கள் பயங்கரவாதப் புற்றுநோய் மேலும் அதிகரிக்கவே வழி செய்யும் எனக் கூறியுள்ளார். பிரிட்டிஷ் அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை, ரஷ்யா எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுள்ள அவர் இரண்டிலும் உள்ள மாறுதல்களையும் அப்பேட்டியில் சுட்டிக்காட்டினார். ஐ எஸ் அமைப்பின் மீது கடந்த செப்டம்பரில் ரஷ்ய சொந்தமாக வான் தாக்குதலை ஆரம்பித்தது. ரஷ்ய எடுத்துவரும் நடவடிக்கை ஐரோப்பாவை காப்பாற்றுகிறது எனவும் அஸத் கூறுகிறார். அதிபர் அஸத் பதவியிலிந்து நீக்கப்படுவதையே பிரிட்டன் விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சிரியாவில் ரஷ்யாவின் தலையீடு அவருக்கான ஆதரவை மேலும் பலப்படுத்துவது போலத் பரந்துபட்ட அளவில் தெரிகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி