1 February 2014 11:51 pm
பிரிட்டனின் பெரிய அணு மீள்உற்பத்தி ஆலையான செல்லாஃபீல்ட்- இல் தொழில் புரியும் மிக அவசியமான பணியாளர்களைத் தவிர மற்றவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்லாஃபீல்ட் ஆலையில் கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த கதிரியக்க வீச்சின் அளவு காரணமாக மக்களுக்கோ பணியாளர்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்பிரியா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கதிரியக்க வீச்சின் அளவு அதிகரித்துள்ளமைக்கான காரணம் பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. செல்லாஃபீல்ட் ஆலை நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து வருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.