“புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்களே காரணம் என்பதில் 95% உறுதி” – ஐ.நா. விஞ்ஞானிகள் அறிக்கை. - தமிழ் இலெமுரியா

29 September 2013 12:02 am

மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூன் இந்த நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். உலகப் பருவநிலை தொடர்பான ஐ.நா உச்சி மாநாடு ஒன்றை அடுத்த ஆண்டில் தான் கூட்டப் போவதாக அவர் கூறியுள்ளார். புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு பாகை செல்ஷியஸுக்கும் கூடுதலாக அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களை சம்மதிக்க வைப்பதென்பது இந்த மாநாட்டின் இலட்சியமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி