பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். - தமிழ் இலெமுரியா

25 November 2013 11:04 pm

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை, கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.  சமீபத்தில் சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன், பேரறிவாளன் சொல்லாத சில வார்த்தைகளையும் அவரது வாக்குமூலத்தில் தான் சேர்த்ததாக கூறியுள்ளார்.  இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.  இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அளித்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சரின் தனிப் பிரிவில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் அளித்த மனுவில், தனது மகன் நிரபராதி என்பதற்கு ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளார்.  மேலும், சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் கருத்தையும் அந்த மனுவில் அற்புதம்மாள் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஆவணப் படம் குறித்த குறுந்தகடையும் மனுவுடன் இணைத்து கொடுத்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி