8 October 2013 8:22 am
இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க போவதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஸ்டீஃபன் ஹார்ப்பர் குற்றம் சாட்டியுள்ளார். காமன்வெல்த் நீதிக்கு புறம்பாக இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக கூறியுள்ள அவர், அங்குள்ள அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் மீது அரசு தொடர்ந்து அடக்குமுறைகளை கையாண்டு வருவதாகவும் அதே போல இலங்கை காமன் வெல்த் மாநாட்டுக்கான நிதியை ரத்து செய்வது குறித்தும் தான் பரிசீலித்து வருவதாக ஸ்டீஃபன் ஹார்ப்பர் கூறியுள்ளார்.