பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் 3 இடங்களில் தொடர் வண்டி மறியல் – 140 பேர் கைது - தமிழ் இலெமுரியா

20 October 2013 4:31 am

இலங்கையில் நடைபெறும் பொதுநல மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 10.30 மணிக்கு பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தலைமையில் பெண்கள் உள்பட 50 பேர் தாம்பரத்தில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் தொடர்வண்டியை மறித்து நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். ஒருங்கிணைந்த அம்பேத்கர் மன்ற காஞ்சி மாவட்ட பொருளாளர் கோபிநாத் தலைமையில் 40 பேர் காலை 11 மணியளவில் குரோம் பேட்டையில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் 50 பேர் காலை 11.15 மணியளவில் பல்லாவரத்தில் தொடர்வண்டி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பல்லாவரம் போலீசார் கைது செய்தனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி