போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், அச்சம் சூழ்ந்த ஒரு நிலையிலேயே வடக்கு மக்கள், வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர் கொள்கின்றனர். - தமிழ் இலெமுரியா

17 September 2013 2:00 am

இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு உள்ளிட்ட பல கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் களமிறங்கியுள்ள போதிலும், இரு முனைப் போட்டியே அங்கு முனைப்பு பெற்றிருக்கின்றது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் வாக்காளரின் பேராதரவைப் பெற்று பல இருக்கைகளைக்  கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிர பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன.  இராணுவத்தின் தலையீடு காரணமாகவே அச்சமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகப் பலரும் முறையிட்டிருக்கின்றனர். ஆயினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவமும் அரச தரப்பினரும் நிராகரித்திருக்கின்றனர். தேர்தல் ஆணையாளரும் இதனைப் புறந்தள்ளியிருக்கின்றார்.  அச்சம் சூழ்ந்திருந்த போதிலும் இந்த மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த மாகாண சபையின் மூலம் வழி பிறக்கும் என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி