மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற மோடியை விட காங்கிரஸ் தான் அதிக உதவி: - தமிழ் இலெமுரியா

16 August 2014 7:05 am

அத்வானி  பாஜக மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற காங்கிரஸ் தான் அதிக உதவி செய்துள்ளதாக அத்வானி தெரிவித்துள்ளார். விடுதலை நாளை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் கடந்த 1952ம் ஆண்டில் இருந்து நடந்து வரும் தேர்தல்களை பார்த்து வருகிறேன். ஆனால் 2014ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகு இது முன்பு எப்பொழுதும் இல்லாத தேர்தல் என்று தோன்றியது. பின்னர் தேர்தல் முடிவுகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எங்கள் கட்சி அமோக வெற்றி பெற எதிர்க்கட்சியான காங்கிரஸ் தான் முக்கிய காரணம். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தவறுகள் மற்றும் ஊழல்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும், மோடி தலைமையில் அனைவரும் வெற்றிக்காக பாடுபட்டது உண்மைதான், ஆனால் அவர்களை விட காங்கிரஸ் கட்சிதான் பெரும் உதவி செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி