மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக வஞ்சனை செய்கிறது – டி.ராஜா குற்றச்சாட்டு - தமிழ் இலெமுரியா

10 December 2014 6:58 pm

மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. வஞ்சனை செய்கிறது என்று கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.  பகவத் கீதையை தேசியப் புனித நூலாக அறிவிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா  கேள்வி எழுப்பினார்.  அப்போது டி.ராஜா, "சுஷ்மா ஸ்வராஜின் கருத்துக்கு இந்த அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும். நாட்டில் வேற்றுமைகள் அதிகம் என்பதால், அதனை பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பல்வேறு மதங்களை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே புனித நூல் உள்ளது.  ஆனால் கீதையை மட்டும் தேசிய புனித நூலாக எப்படி அறிவிக்க முடியும். இதை சுஷ்மாவின் தனிப்பட்ட கருத்தாக பார்க்க முடியவில்லை. இதன் பின்னணியில் பாஜக முக்கிய தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். பெரும் புள்ளிகளும் இருக்கின்றனர்.  அதேபோன்று பள்ளிகளில் சமஸ்கிருத்தை திணிக்க பாஜக முனைப்பு காட்டுவது ஏன்? சமஸ்கிருதம் போலவே தமிழ் மொழியும் பழமையான மொழியே. அப்படியிருக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க வஞ்சனை செய்கிறது என்று கூறியுள்ளார்.  மேலும் அவர், இந்தியா மிகப்பெரிய நாடு. வேற்றுமைகள் அதிகம் உள்ள நாடு என்பதால் அதனை பலவீனமாக எடுத்துக்கொள்ள கூடாது. சாதகமாக எடுத்துக்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி