மதுரையில் துணைக்கோள் நகரம் : முதல்வர் செயலலிதா - தமிழ் இலெமுரியா

21 October 2013 12:09 am

மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 500 மனைகள் கொண்ட ஒரு தனி துணை நகரம் அமைக்கப்படும் எனவும் இதற்கென ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெ., கூறியுள்ளார். மதுரை விமானநிலையம் அருகே தோப்பூர் , உச்சப்பட்டடியில் இந்த நகரம் அமையும். 586 ஏக்கரில் 19 ஆயிரத்து 500 மனைகள் குறைந்த வருவாய் , மற்றும் உயர்ந்த வருவாய் உள்ளவர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். இங்கு வாழும் அனைவருக்கும் தேவையான பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு வளாகம், உள்ளிட்டவை அமைத்து தரப்படும். பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக, தமிழகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு 19 விடுதிகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி