மருந்துக்கு கட்டுப்படாத புதுவகை கிருமிகள்: நிதியாதாரம் கோரும் மருந்து நிறுவனங்கள் - தமிழ் இலெமுரியா

21 January 2016 4:50 pm

புதிய அண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்காக ஆராய்ச்சி செய்வதற்கும் அவற்றை உருவாக்குவதற்கும் நிதி உதவி வழங்க புதிய வழிகளை அரசாங்கங்கள் கண்டறிய வேண்டும் என உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. தற்போதுள்ள மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகின்ற வீரியமிக்க புது வகை கிருமிகள் பரவுவதால் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், அவ்வகை கிருமித்தொற்றுகளைத் தடுக்க உலக நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துக்கு கட்டுப்படாத கிருமித் தொற்றுகளைச் சமாளிப்பது பற்றிய பிரகடனம் ஒன்றில் ஜி எஸ் கே, ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. டேவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டில் இதற்கான திட்டம் தொடங்கப்படவுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி