18 January 2016 10:00 am
தம்மால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர், தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக மலேசிய போலிஸார் கூறியுள்ளனர். தலைநகர் கோலாலம்பூரில் ஒரு வணிக மையத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த நபர் ஒரு மலேசிய பிரஜையாவார். அவரது வீட்டில் கத்தியும், இஸ்லாமிய அரசின் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்ட்தாகவும், மலேசியாவின் பல மாநிலங்களில் அவர் இஸ்லாமிய அரசுக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார் என்றும் போலிஸார் கூறுகின்றனர்.