மாநில முதலமைச்சராக இருந்த மோடி 13வது சரத்துக்கு உரிய மதிப்பை கொடுப்பார்- சிங்கள ஊடகங்கள் - தமிழ் இலெமுரியா

31 May 2014 1:40 am

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் இந்தியாவின் புதிய தலைமையமைசர் கடுமையாக நடந்து கொள்வார் என்று இலங்கையின் சிங்கள ஊடகங்கள் கூறியுள்ளன. இந்தியாவின் கடந்த மன்மோகன் சிங் அரசாங்கம், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இதற்கு பல்வேறு புறக்காரணிகள் இருந்தன. இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை பின்பற்றியது. இதன்போது இந்திரா காந்தியின் விசேட பிரதிநிதியாக செயற்பட்ட ஜீ.கே. பார்த்தசாரதியை இலங்கை பயந்த நிலையிலேயே பார்த்தது. இந்திரா காந்திக்கு பின்னர் அதே பாணியில் செயற்பட முனைந்த முன்னாள் பிரதமர் ராஜீவை ஜே.ஆர் ஜெயவர்த்தன நரி மூளையை கொண்டு ஏமாற்றி விட்டார். இதன் காரணமாகவே இந்தியாவுக்கு புலிகளுக்கும் இடையில் பகை உருவானது. தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சியளித்த இந்தியாவே அந்த தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக போர் புரியும் அளவுக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தன திறமையாக திட்டம் வகுத்தார். இதனையடுத்து மாறிமாறி வந்த இந்திய அரசாங்கங்களும் இலங்கைக்கு உரிய அழுத்தத்தங்களைக் கொடுக்க தவறிவிட்டன. இதற்கு காரணம் மத்தியில் தலைமையமைச்சர்களாக இருந்தவர்களுக்கு மாநிலங்கள் ஆட்சி அதிகாரப் பரவலாக்கத்தின் தன்மை புரியாமையாகும். எனினும் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தவர்.. எனவே அவருக்கு மாநிலம் ஒன்றின் அதிகாரம் அத்துடன் மத்திய அரசாங்கம் ஒன்றின் அதிகாரம் என்பவை தொடர்பில் நன்றாகவே தெரியும். எனவே மாநில முறையிலான அதிகாரப் பரவாலக்கலை இலங்கைக்கு வடக்கு கிழக்குக்கான 13வது சரத்தும் கொண்டிருப்பதால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி உரிய நடவடிக்கையை மேற்கொள்வார் என்று இலங்கையின் சிங்கள ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி