மாமியாரைத் தாக்கிய மருமகள் : வீடியோவை அடுத்து கைது - தமிழ் இலெமுரியா

13 January 2016 11:12 am

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஒரு பெண் தனது மாமியாரை அடித்துத் துன்புறுத்தும் சி.சி.டி.வி காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 12-01-2016 அன்று போலிஸார் சங்கீதா ஜெயின் என்ற இந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவர் தனது மாமியாரான, 70 வயதான ராஜ் ராணி ஜெயினை, தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சங்கீதாவின் கணவர், தன் மனைவியின் செயல்களை வெளிக்கொணர்வதற்காக, பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் சி.சி.டி.வி கேமராவை நிறுவினாராம். கடந்த வாரம் இந்தக் காட்சி அந்தக் கேமராவில் பதிவானது. இந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் மாமியாருக்கிடையே அடிக்கடி சச்சரவுகள் நடந்ததாக போலிசார் கூறினர். தனக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்ததிலிருந்தே தனது மனைவி தன் குடும்பத்தினரை தாக்கிவந்ததாக சந்தீப் ஜெயின் என்ற அந்தக் கணவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்குதலுக்கான நோக்கமோ அல்லது ஏன் இந்த விஷயத்தை போலிசுக்குச் சொல்ல சந்தீப் ஜெயினுக்கு இவ்வளவு காலம் பிடித்தது என்பதோ தெளிவாகவில்லை. இந்த காட்சிகள் குறித்து சங்கீதா ஜெயின் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தக் காட்சியில், ஒரு பெண் ஒரு வயது முதிர்ந்த மற்றொரு பெண்மணியை அடித்து இழுத்துவரும் காட்சிகள் காட்டப்படுகின்றன. சில காட்சிகளில் அவர் அந்தப் பெண்மணியை கழுத்தை நெறிப்பது போலவும் காட்சிகள் தெரிகின்றன. "என் மருமகள் என்னை அடித்து , கழுத்தை நெறிக்க முயன்றார். பின் அவர் கல்லால் என்னை அடிக்க முயன்றார்" , என்று கூறினார் ராஜ் ராணி ஜெயின். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். போலிஸ் அதிகாரி தல்ஜித் சௌத்ரி இந்த சம்பவம் குறித்து போலிசார் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி