16 December 2015 9:46 am
சீனாவின் கம்யூனிஸத் தலைவர் மாவோ சேதுங் 1937-ம் ஆண்டில் எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்று லண்டனில் 9 லட்சம் டாலருக்கும் அதிக விலைக்கு ஏலம்போயுள்ளது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதம், அப்போதைய பிரிட்டிஷ் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்டுள்ளது. "மிகவும் அரிதானது" என்று இந்தக் கடிதத்தை ஏலத்தில் விற்ற நிறுவனம் வர்ணித்திருந்தது. சீனா மீதான ஜப்பானின் படையெடுப்புக்கு எதிராக பிரிட்டன் நடைமுறை ரீதியான உதவிகளை வழங்கவேண்டும் என்று மாவோ அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். முன்னதாக, ஒன்றரை லட்சம் டாலருக்குத் தான் இந்த கடிதம் ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.