15 October 2015 3:30 pm
தேசம் முழுக்கவுமான போர்நிறுத்தம் என்று தாம் வர்ணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை மியன்மர் அரசாங்கம், அந்நாட்டின் ஆயுதக் குழுக்களில் எட்டுடன் செய்து கொண்டுள்ளது.ஆனால் அந்நாட்டில் அதிகமாக செயல்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை. இரண்டு ஆண்டு காலமாக நடந்து வந்த சிக்கலான பேச்சுவார்த்தைகளை அடுத்து தலைநகர் நய்பீடாவில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.கடைசி கட்டத்தில், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த பதினைந்து ஆயுதக் குழுக்களில் ஏழு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துள்ளது. அண்மையில் சில வாரங்களில் நாட்டின் இராணுவத்துக்கும் இனரீதியான ஆயுதக் குழுக்கள் பலவற்றுக்கும் இடையே மோதல்கள் நடந்திருந்தன.அடுத்த மாதம் நாட்டில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்து விட வேண்டும் என்பது அரசாங்கத்தின் விருப்பம்.