மியன்மார் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவடைகின்றது - தமிழ் இலெமுரியா

9 November 2015 10:50 am

மியன்மார் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது. அரை நூற்றாண்டுக்கும் அதிக காலம் நீடித்த இராணுவ பின்புலம் கொண்ட ஆட்சி இந்தத் தேர்தல் மூலம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தல் நடந்த அன்று இரவு வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என்ற போதிலும், இறுதி முடிவுகள் வெளியாக பல நாட்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்ட தகவல்களின்படி, 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. பெருமளவிலானவர்கள் வரிசைகளில் பொறுமையாக காத்திருந்து வாக்களித்துள்ளனர். ஆங் சான் சூ சி-யின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், நாடாளுமன்றத்தில் 25 வீதமான இடங்கள் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சூ சி-யின் கட்சியால் தனித்து அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு பலம் கிடைக்காமல் போகலாம் என்றும் கூறப்படுகின்றது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி