மும்பை சீர்வரிசை சண்முகராசன் மறைந்தாலும், அவர் பேணிய மனித நேயப் பண்பால், செயலால் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்! -கி.வீரமணி - தமிழ் இலெமுரியா

16 August 2014 7:18 am

சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் உடலால் மறைந்தாலும், அவர் பேணிய மனிதநேயப் பண்பால், செயலால் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டி ருப்பார் என்று விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். மும்பை வாழ் தமிழரும், சீரிய எழுத்தாளரும், முது பெரும் பெரியார் பெருந்தொண்டருமான சீர்வரிசை சண் முகராசனின் நினைவேந்தல் நிகழ்வு மும்பை நகரில் 13.8.2014 அன்று நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் பங்கேற்று சீர்வரிசை சண்முகராசனின் உருவப் படத்தினை திறந்து வைத்து வீர வணக்க உரை நிகழ்த்தி னார். சமூகசிந்தனையாளரும், பம்பாய் திருக்குறள் பேரவை மற்றும் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் நிறுவனருமான சீர்வரிசை சண்முகராசனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, மும்பை மாநகர் சயான் – கிழக்குப் பகுதி பவுதாஜி சாலையில் அமைந்துள்ள பாரதீய மியூசிக் அரங்கில் (எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கம்) 13.8.2014 அன்று மாலை 6.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் வி.தேவதாசன் தலைமை தாங்கினார். நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று, மகாராட்டிர மாநிலத்திலிருந்து வெளிவரும் தமிழ் இலெமூரியா மாத இதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் முகவுரை ஆற்றினார். சீர்வரிசை சண்முகராசனின் உருவப் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த சீர் வரிசை சண்முகராசனின் நினைவினைப் போற்றி பெரியார் இயக்கப் பொறுப்பாளர்கள், மும்பைத் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பொறுப்பா ளர்கள் என பலதரப்பட்டவர்கள் உரையாற்றினார்.சீர்வரிசை சண்முகராசனார் நினைவுச் சிறப்பிதழ் வெளியீடு படத்திறப்பிற்குப் பின்னர் தமிழ் இலெமூரியா இதழின் மும்பை சீர்வரிசை சண்முகராசனார்  நினைவுச் சிறப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர்  வெளியிட, முதல் இதழினை சீர்வரிசையாரின் நெடுநாள் நண்பரும், கர்வாரே பாலியெஸ்டர் நிறுவனத்தின் மேனாள் இயக்குனருமான கணேசன் பெற்றுக்கொண்டார்.வீர சிவாஜியின் முடிசூட்டல் பற்றிய நூல்கள் வெளியீடு பெரியார் இயக்கத்தினர் நடத்துகின்ற எந்தவொரு நிகழ்ச்சியாக இருப்பினும், அது கொள்கைப் பிரச்சார விழா வாக நடைபெறுவது வழக்கம். முதுபெரும் பெரியார் தொண்டர் சீர்வரிசை சண்முகராசனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மராட்டிய மாவீரன் வீர சிவாஜி பற்றிய நூல்கள் இரண்டு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வெளியிடப்பட்டன. மராட்டிய மண்ணின் மாவீரன், போர்க்களத்தில் வெற்றி கள் பல ஈட்டிய தலைவன் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள மதவாதிகளின் காலடியில் மண்டியிட்ட வரலாறுபற்றிய நூல்கள் அவை. திராவிடர் இயக்க முன்னோடியும், நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவருமான சர்.ஏ.இராமசாமி (முதலியார்) அவர்கள் அந்நாளில் நீதி (ஜஸ்டிஸ்) இதழில் எழுதிய தலையங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும் இந்த நூல்கள். Shivaji’s Coronation and Brahminism எனும் ஆங்கிலப் புத்தகமும், அதன் தமிழ் மொழியாக்கமான சிவாஜி முடிசூட்டலும், பார்ப்பனியமும் எனும் நூலும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அறிஞர் அண்ணா எழுதிய புலிநகம் (சிவாஜிபற்றியது) கட்டுரையும் தமிழ் மொழியாக்க நூலில் இணைக்கப்பட்டிருந்தது. வீர சிவாஜி முடிசூட்டல்பற்றிய இரண்டு நூல்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட, ஆங்கில நூலினை மும்பாய் – கல்யாண் பகுதி புத்த மார்க்க மன்றத்தின் அமைப்பாளர் காம்ளேவும், தமிழ் மொழியாக்க நூலினை பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் வி.தேவ தாசனும் பெற்றுக்கொண்டனர்.தமிழர் தலைவர் ஆற்றிய நினைவேந்தல் உரை நிகழ்ச்சியில் சீர்வரிசை சண்முகராசனின் நினைவு களைப் போற்றி வீர வணக்கம் செலுத்தி தமிழர் தலைவர் கி.வீரமணீ உரையாற்றினார். என்றைக்குமே மறக்க இயலாத முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் ஆவார். உடலால் மறைந்தாலும், என்றென்றும் நம் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் பெரியார் இயக்கத்தின் லட்சிய வீரர் ஆவார். எதனையும் திட்டமிட்டு செயல்படுத்திடும் வழக் கம், எல்லோரையும் பாராட்டிடும் பண்பு, திறமை உள்ளோரை உற்சாகப்படுத்திடும் பண்பு, பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைப்பற்று என பன்முகத் திறனுடன் விளங்கிய சீர்வரிசை சண்முகராசன் அவர்கள், ஊக்கமளிக்கும் சக்தியாக வாழ்ந்தவர். 10 நாள்களுக்கு ஒருமுறை நான் எந்த ஊரில் நாம் பயணத்தில் இருந்தாலும், எம்மை செல்பேசியில் தொடர்புகொண்டு, பெரியார் இயக்கம் தொடர்பான பத்திரிகை, தொலைக்காட்சி. ஊடகச் செய்திகளைத் தெரி விப்பதை தம் வாழ்வியல் வழக்கமாகவே கொண்டிருந்தவர் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு மும்பாய் மாநகருக்கு வருகை தந்திருந்தபொழுது, சீர்வரிசை சண்முகராசன் – தவமணி அம்மாள் தம்பதியி னரைப் பாராட்டி அவர்தம் பகுத்தறிவு நெறி சார்ந்த வாழ்வியலைப் போற்றி பெரி யார் விருதினை வழங்கி மகிழ்ச்சி அடைந்தோம்! வெகு விரைவிலேயே அவர் தம் மறைவை அடுத்து படத் திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள் வோம் என நாம் எதிர்பார்க் கவே இல்லை. சீர்வரிசையார் மறைந்த பின்னர், அவரது இறுதி நிகழ்ச்சியினை எந்த வித சடங்குகளும் இல்லாமல், பகுத்தறிவு சார்ந்த தன்மை யில் அவரது குடும்பத்தார் குறிப்பாக, சீர்வரிசையாரின் துணைவியார் தவமணி அம் மையார் நடத்தியுள்ளார். அவர்தம் குடும்பத்தார் அனை வரும் பாராட்டுதலுக்குரிய வர்கள். சீர்வரிசையார் எப்படி பகுத்தறிவாளராக வாழ்ந் தாரோ, இறுதி நிகழ்ச்சியும் அவ்வாறு பகுத்தறிவு நெறி சார்ந்து அமைந்ததாக அவரது துணைவியார் எமக்கு செல்பேசியில் தெரிவித்தது மிகவும் பெருமையாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் சிறந்த மனித ராக வாழ்ந்தவர்; கொள்கை அளவில் என்றென்றும் வாழ்பவர் சீர்வரிசை சண்முகராசன் ஆவார். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்என்பது திருவள்ளுவரின் வாய்மொழி. ஒப்புரவை நன்கு அறிந்து, அதனைக் காப்பாற்றி பிறருக்கு உதவியாக இருந்து வாழ்க்கையை நடத்துகின் றவர் உள்ளபடியே உயிர் வாழ்கின்றவர் ஆவார். ஒப்புரவுப் பண்பு இல்லாதவர், அவர் உயிரோடு இருந்தாலும்கூட, இறந்து போனவர்களில் ஒருவராகவே வைத்து எண்ணப்படுவர்.அடுத்தவர்பால் அனுதாபம் கொள்வது, இரக்கப் படுவது (Sympathy) என்பது ஒருநிலை;  இன்னலை அடுத்தவர் நிலையிலிருந்து ஒத்து அறிவது (Empathy) என்பது உயர்நிலை. அப்படிப்பட்ட உயர் நிலையில், ஒத்து அறிந்து வாழ்ந்தவர் சீர்வரிசை சண்முகராசன். அந்த வகையில் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் மறையவில்லை; இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். மனித வாழ்வியலின் பெருமை எது? என்பதற்கு தந்தை பெரியார் தத்துவ விளக்கம் அளிப்பார். செத்துப்போகுதல் என்பதற்கு சத்துப் போய்விடுதல் என்று பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என் னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதா வது சத்துப் போய்விட்ட பின், அதை சத்துப் போகு தல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது. இப்படி சத்துப் போய்விட்ட இயற்கை நிகழ்வினை செத்துப் போய்விட்டது எனக் கூறி, உடலிலிருந்து ஆத்மா என்று பிரிந்து நேராக மேல் உலகம் சென்று அங்கு அது இங்கு செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்றவாறு தண்டனை பெறுகிறது. பாவம் செய்த ஆத்மா நகரத்தில் தள்ளப் படுகிறது என மக்களை மூடப்படுத்தி, அதில் ஆதாயம் காணமுயலும் ஆன்மீகவாதிகளின் செயல் புரிந்து கொள்ளப்படவேண்டும். மோட்சம், நரகம் என்பது பற்றிய நம்பிக்கையினை மறுத்து, பகுத்தறிவு நெறியுடன் வாழ்ந்த சீர்வரிசையார் தாம் கடைப்பிடித்த கொள்கைகளால், பிறருக்கு உதவி செய்திடும் பாங்கினால், என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார். சீர்வரிசையார் சீரிய சிந்தனையாளர், நல்ல எழுத்தாளர், செத்துப்போவது சத்துப்போய்விட்டதே என தத்துவ விளக்கம் கூறிய தந்தை பெரியாரின் தொண்டர். சீர்வரிசையார் மனித இழப்பு என்பதற்கு தாம் எழுதிய அன்பின் சுவடுகள் எனும் நூலில் குறிப்பிடுகிறார். மனித இழப்புக்கு ஈடாக எதையும் உடனடியாகச் செய்துவிட முடியாது. இழப்பு என்பதுதான் நம்முடைய வழக்கில் எழவு என்பதாகிவிட்டது. இன்றைக்கும் நம்முடைய கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால், எழவு வீடு என்றுதான் சொல்கிறார்கள். இழப்பு என்பது எழவு என்பதாக விளக்கிய சீர்வரிசையாரின் சிந்தனை, எழுத்தாற்றல் அவரது நினைவுகளை என்றைக்கும் நிலைத்திடச் செய்யும். சீர்வரிசையார் மறையவில்லை. அவரது எழுத்துகளில், படைப்புகளில், கடைப் பிடித்த வாழ்வியல் பண்புகளில், ஏற்றுக் கொண்ட தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைப் பணியில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். சீர்வரிசையார் விரும்பிய வண்ணம், இறந்த பின்னர் அவரது விழிகள், கொடையாக மருத்துவமனைக்கு அளிக்கப் பட்டன. அவரது குடும்பத்தார் அவரது விருப் பத்தை மிகுந்த பொறுப்புடன் செய்து முடித்துள்ளனர். கொடையளிக்கப்பட்ட விழிகளால், அந்த விழிகளின் மூலம் பார்வை பெற்றவர் மூலம் சீர்வரிசையார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உடலால் மறைந்த பின்னரும் அவர் பேணிய மனித நேயப் பண்பால், செயலால் என்றென் றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார். சீர்வரிசையார் நினைவுகள் நீடுழி வாழ வேண்டும். வாழ்க அவர்தம் வாழ்வுப் புகழ்!- இவ்வாறு கி.வீரமணி உரையில் குறிப்பிட்டுப் பேசினார். முன்பாக சீர்வரிசை சண்முகராசனின் நினைவுகளைப் போற் றியும், அவர்தம் மனித நேயம் நிறைந்த பண்பு மற்றும் பழகும் தன்மைகள், பிறருக்கு உதவிடும் பாங்கு, மும்பாய் நகரில் தமிழர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களை சந்தித்துப் பழகிப் பாராட்டிடும் வழக்கத்தினை, அவர்தம் எழுத்தாற்றலை நினைவு கூர்ந்தும் பலரும் உரையாற்றினர். சீர்வரிசையாரின் நீண்ட நாளைய நண்பர் கணேசன் மராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தினைச் சார்ந்த கதிர்வேல், கருண் (இந்திய பேனா நண்பர் பேரவை), ஞான அய்யாபிள்ளை (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), எஸ்.ரவீந்திரன் (அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், கே.எச்.விஸ்வநாதன் (விடுதலைச் சிறுத் தைகள் கட்சி), புதிய மாதவி (தமிழ் எழுத்தாளர் மன்றம்), ஜே.பாலு (எழுத்தாளர் மன்றம்), காம்ளே (புத்தமார்க்க மன்றம்), எழுத்தாளர் மு.தருமராசன், சித்தார்த்தன் (தி.க. பெரம்பலூர்), கோ.வள்ளுவன் (மும்பாய் புறநகர் திமுக), அ.ரவிச்சந்திரன் (அமைப்பாளர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்), சம்பத் (திருவள்ளுவர் மன்றம்), பெரியார் விருதாளர் அப்பாதுரை (மேனாள் செயலாளர், புறநகர் திமுக மும்பாய்). வழக்குரைஞர் ராஜாமணி (தலைவர் மும்பாய் மாணவர் மன்றம்), சிங்காரவேலு அய்.பி.எஸ் (பணி நிறைவு), சமீரா மீரான் (தலைவர், மராட்டிய மாநில தமிழ் எழுத் தாளர் மன்றம்), பி.கணேசன் (தலைவர் மும்பாய் திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், சென்னை) ஆகியோர் உரை யாற்றினர். சீர்வரிசையார் அவர்களின் பெயர்த்தி லெமூரியாயாழ், தமது தாத்தா பற்றி நினைவுகளைக் கூறி ஆங்கில கவிதை யினை வாசித்தார். மராட்டிய மாநில அரசின் உயர் அய்.ஏ.எஸ்.அதிகாரி பி.அன்பழகன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். மேலும் பல்வேறு அமைப்பு களைச் சார்ந்தோர் சீர்வரிசையாரின் நினைவு களைப் போற்றி செய்திகளை அனுப்பியி ருந்தனர். நினைவேந்தல் நிகழ்ச்சியினை சீர் வரிசை சண்முகராசனாரின் இளவல் பூபாலன் நன்றி கூறி நிறைவு செய்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி