மெட்ராஸ் கபே திரைப்படம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியான நிலையில் தமிழகத்தில் வெளியாகவில்லை. - தமிழ் இலெமுரியா

24 August 2013 7:09 am

நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் கபே திரைப்படம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் வெளியான நிலையில் தமிழகத்தில் வெளியாகவில்லை. இத்திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் படத்தில் தவறாக சித்திரித்திருப்பதாக புகார் கூறி மதிமுக கட்சி தலைவர் வைகோ, நாம் தமிழர் இயக்கதின் தலைவர் சீமான் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்தும் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். திரைப்படத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும் இத்திரைப்படத்தின் இந்தி மற்றும் தமிழ் மொழிமாற்ற பதிப்புகள் தமிழ் நாட்டில் வெளியாகவில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மும்பை நகரத்திலும் இப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இது போன்றே கனடா, இங்கிலாந்து நாடுகளிலும் எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒரு இன விடுதலைப் போராட்ட்த்தைக் கொச்சைப் படுத்தியும், இந்தியா-இலங்கை அரசியல்வாதிகள் சிலர் உள் நோக்கத்துடன், தவறான தகவல்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது என எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி