மேலதிகமாக 20 லட்சம் குழந்தைகளை பெற சீனா ஊக்குவிப்பு - தமிழ் இலெமுரியா

31 May 2014 1:42 am

சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை தளர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவினைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஆண்டுதோறும் மேலதிகமாக 20 லட்சம் குழந்தைகளை பெறுவதற்கு வசதியாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் அதிகளவில் கட்டில்களையும் மகப்பேறு -அறைத் செவிலியர்களையும் அரசாங்கம் வழங்கவுள்ளது. பெற்றோரில் ஒருவர், அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருந்திருப்பாரானால், அவருக்கு இரண்டாவது குழந்தையையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று சீன அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதற்கு முன்னர், பெற்றோர் இருவருமே அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளையாக இருந்தால் மட்டுமே அவர்களால் இரண்டாவது குழந்தையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று சட்டம் இருந்துவந்தது. சீனாவின் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் வெளிநாடுகளால் அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வந்தன. இப்போது நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக கூடிக்கொண்டுவரும் நிலையில். சனத்தொகையில் சமநிலையைக் கொண்டுவரும் முயற்சியாக அரசு தனது கொள்கையை சற்றுத் தளர்த்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி