மோடியை முன்னிறுத்தியது பா.ஜ.கவின் தற்கொலை முடிவு… காங்கிரசு கருத்து - தமிழ் இலெமுரியா

17 September 2013 2:03 am

பிரதமர் பதவிக்கு வர துடியாத் துடிக்கிறார் நரேந்திர மோடி. அவரது கனவு நிச்சயம் நிறைவேறாது. மோடியை முன்னிறுத்தியதன் மூலம் தற்கொலை முடிவை எடுத்துதுள்ளது பா.ஜ.க என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. மோடியை தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.கவே வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. பா.ஜ.கவின் இந்த முடிவு அரசியல் தற்கொலை என்று வருணித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அனந்த சர்மா, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை மக்கள் நிராகரித்து விட்டதால் இப்போது மோடியைக் கொண்டு வந்துள்ளது பா.ஜ.க., என்றும் கூறியுள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி