யாக்கூப் மேமன் தூக்கிலிடப்பட்டார் - தமிழ் இலெமுரியா

30 July 2015 4:13 pm

மும்பையில் 1993ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட யாக்கூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியரசுத்தலைவராலும், உச்ச நீதிமன்றத்தாலும் அவரது மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து நாக்பூரில் அவர் தூக்கிலிடப்பட்டார். 257 பேர் பலியாகக் காரணமான அந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தண்டிக்கப்பட்ட முதலாவது நபர் இவராவார். அந்தச் சம்பவத்துக்கு சில மாதங்கள் முன்னதாக இந்தியா எங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை நடவடிக்கைகளுக்கு பழிவாங்கும் வகையில் அந்தக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. அந்த தாக்குதல்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறியிருந்த யாக்கூப் மேமன் ஒருவருடத்தின் பின்னர் நாடு திரும்பியிருந்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி