லண்டனில் காந்தி சிலை திறந்துவைக்கப்பட்டது - தமிழ் இலெமுரியா

17 March 2015 4:10 pm

14 மார்ச் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:35 ஜிஎம்டி மகாத்மா காந்தியின் வெண்கல உருவச்சிலை ஒன்று லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பி நூறாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி இந்தச் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண பலர் கூடியிருந்தனர்.ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி, சுயாட்சிக்கான இந்தியப் போராட்டத்தை தொடங்கினார். பிரிட்டனின் நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்தியர் ஒருவரின் சிலை திறந்து வைக்கப்படுவது இதுவே முதல்முறை. காந்தியின் சிலை திறக்கப்படுவதையொட்டு, அந்த இடத்தில் இந்தியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைக்கு அருகே காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி