விஜயகாந்த், பிரேமலதாவுக்கு நீதிமன்றம் அபராதம் - தமிழ் இலெமுரியா

17 February 2015 7:27 pm

தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய விஜயகாந்திற்கு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் மீது தமிழ்நாடு அரசு 12 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த அவதூறு வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக்கொள்வதாக விஜய்காந்த் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட, சென்னை உயர் நீதிமன்றம் அதற்கான கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சுந்தரேசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி, உச்ச நீதிமன்றத்துக்கு இந்த அவதூறு வழக்குகளை மாற்றுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாவும், அதற்காக மேலும் கால அவகாசம் வேண்டும் என்றும் விஜய்காந்த் தரப்பில் கேட்கப்பட்டது. இதனையடுத்து, ஏற்கனவே ஒன்றரை மாத கால அவகாசம் கொடுத்தும் வழக்குகளை மாற்றவில்லை என்பதால்,நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கு ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த 15 நாட்களுக்குள் வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றவதற்கான நடவடிக்கைகளை விஜயகாந்த் மேற்கொள்ளாவிட்டால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி