13 பிலியன் டாலர்கள் வர்த்தக ஒப்பந்தம் -இந்தியா ,பிரிட்டன் அறிவிப்பு - தமிழ் இலெமுரியா

13 November 2015 10:36 am

பிரிட்டிஷ் மற்றும் இந்திய நிறுவனங்களிடையே 13 பிலியன் டாலர்களுக்கும் மேலான பெறுமதியான புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பிரிட்டிஷ் மற்றும் இந்தியப் பிரதமர்கள், டேவிட் கேமரனும் நரேந்திர மோடியும் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்களுக்கான அறிவிப்பை பிரிட்டன் வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், டேவிட் கேமரனும் கூட்டாக லண்டனில் நடத்திய ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டனர். இந்தியப் பிரதமராக 18 மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிரிட்டனுக்கு மோடி மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ஒன்றையும் இரு தலைவர்களும் அறிவித்தனர். இது நாடுகளுக்கிடையேயுள்ள பரஸ்பர நம்பிக்கையின் ஒரு குறியீடாக இந்த ஒப்பந்தங்கள் விளங்குகின்றன என்று மோடி தெரிவித்தார்.ராணுவ மரியாதை முன்னதாக பிரிட்டனுக்கு மூன்று நாள் விஜயமாக நேற்று 12-11-2015 வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு பின்னர், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுடன் பேச்சுவார்த்தைகள் நட்த்தினார். முன்னதாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரதமர் மோடி வந்திறங்கியபோது அவரை பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக துணை அமைச்சர் ஹுகோ ஸ்வைர் வரவேற்றார்.மோடி பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபத்தையும் சந்திக்கவுள்ளார். மோடியின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கேமரன் இது, வரலாற்றால், மக்களால் மற்றும் விழுமியங்களால் பிணைக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும், நமது காலகட்டத்தின் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள இணைந்து செயல்படக் கிடைத்திருக்கும் ஒருமுக்கியமான சந்தர்ப்பம்" என்றார் இது தவிர இன்று 13-11-2015 லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடக்கவுள்ள புலம்பெயர் இந்தியரை சந்திக்கவுள்ள மோடிக்கு பெரும் வரவேற்பளிக்க புலம்பெயர் இந்திய அமைப்புகள் ஏற்பாடுகள் செய்துள்ளன. பிரதமர் மோடிக்கு புலம்பெயர் இந்தியர்கள் அளிக்கவிருக்கும் வரவேற்பு குறித்து, முன்னாள் பிரிட்டிஷ் அமைச்சரும், இந்திய வம்சாவளியருமான கீத் வாஸ் தெரிவிக்கையில், இது ஒரு முக்கியமான ஒரு விஜயம். அவர் இந்தியாவை விட்டு வெளியே வந்து பல நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களை சந்திக்க முயற்சி எடுத்திருக்கிறார். இது நாங்கள் முன்பு எப்போதும் பார்த்திராத ஒன்று. ஒரு இந்தியத் தலைவர் மட்டுமல்ல வேறெந்த நாட்டின் தலைவரும் தங்கள் நாடுகளிலிருந்து வந்து புலம்புயர்ந்த மக்களை இப்படி சந்திப்பதை நாங்கள் பார்த்ததில்லை", என்றார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி