23 October 2016 12:42 pm
இந்தியாவின் இணைய பாதுகாப்பில் மிகப்பெரிய ஊடுருவலாக கருதப்படும் சம்பவத்தில், டெபிட் கார்ட் தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஊடுருவலில் சுமார் 32 லட்சத்துக்கு மேற்பட்ட கார்ட்களின் ரகசியத் தகவல்கள் வெளியே கசிந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். ஏ.டி.எம் நெட்வெர்க்கிற்குள் இருந்த ஒரு தீய மென்பொருளே இதற்கு காரணம் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.இந்தியாவில் உள்ள பெரிய வங்கிகளில் சில, தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம் கார்ட்களின் ரகசிய எண்ணை மாற்றும்படி கேட்டுள்ளன அல்லது புதிய மாற்று கார்டுகளை வழங்குகின்றன. ஆனால், சில கணக்குகளில் ஏற்கனவே பெரியளவிலான தொகைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.