இலக்கணக் குரிசில் விருது - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:25 am

ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையின் 24 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும், துளி" மாத இதழின் 28 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும் ஈரோடு தமயந்தி பாபுசேட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழிசை அரங்கம், படத்திறப்பு அரங்கம், வாழ்த்தரங்கம், நூல் வெளியீட்டு அரங்கம், கவி அரங்கம், பட்டிமன்றம், விருது அரங்கம், எனப் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அதுபோது, கொங்கு இதழ் ஆசிரியர், கல்வெட்டு ஆய்வறிஞர் ஈரோடு புலவர் செ.இராசுவும், சென்னை "தமிழ்ப்பணி" ஆசிரியர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனும் இணைந்து குடந்தய்க் கும்பலிங்கனுக்கு "இலக்கணக் குரிசில்" விருது வழங்கிச் சிறப்பித்தனர். மேலும் விழாவில் கரூர்ப் புலவர் அருணா பொன்னுசாமி, முனைவர் கடவூர் மணிமாறன், வா.மு.சே திருவள்ளுவர், திருக்குறள் அறிஞர் நாவை சிவம், வெங்காளுர் சி.சு.இளங்கோவன் முதலியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கினர். விழாவை கவிஞர் சேலம் பாலன் முன்னின்று நடத்தினார். "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி