உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா - தமிழ் இலெமுரியா

16 June 2016 8:15 pm

குளித்தலை, கிராமியம் அரங்கில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளையின் தொடக்கவிழா நடைபெற்றது. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாரிசில் வாழும் பாட்டரசர் கி.பாரதிதாசன் விழாவிற்கு தலைமையேற்றார். இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உலகத் தொல்காப்பிய மன்ற கிளைகள் தொடங்கியிருப்பதாகக் கூறிய அவர், தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழர்கள் அனைவரும் உணர்ந்திடச் செய்வதே இவ்வமைப்பின் முதன்மையான நோக்கம் என்பதையும் எடுத்துரைத்தார். குளித்தலை தமிழ்ப் பேரவைத் தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன் வரவேற்புரையாற்றினார். உலகத் தொல்காப்பிய மன்றப் புதுவைக் கிளையைச் சார்ந்த முனைவர் ப.பத்மநாபன், பாவலர் ப.எழில்வாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திருச்சி தூயவளனார் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இ.சூசை தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல்" என்னும் பொருளில் அரியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார். நிறைவாக தமிழ்ப் பேரவைச் செயலாளர் ம.இராதா நன்றி நவின்றார். விழாவில் முனைவர் கருவூர் கன்னல், பரமத்தி வ.சரவணன், நன்செய்ப் புகழூர், பாவலர் அழகரசன், வெ.அறிவுக் கண்ணன், பாலா, புலவர் தண்டபாணி, புலவர் ஞான வேலாயுதம், ம.அந்தோணி சாமி, தமிழாசிரியர் கருப்பண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி