உலக மகிழ்ச்சி நாள் விழா - தமிழ் இலெமுரியா

14 April 2014 8:16 am

வந்தவாசி அரசு கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக உலக மகிழ்ச்சி தின விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலக வாசகர் வட்டச் செயலாளர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். மேனாள் தலைமையாசிரியர் கோ.சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினார்.           நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட மேனாள் மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் ரூ.ஐந்தாயிரம் செலுத்தி  டாக்டர் எஸ்.குமார் நூலகப் பெரும்புரவலராக இணைந்தார். ரூபாய் ஆயிரம் செலுத்தி, நூலகப் புரவலராக க.சுரேசு இணைந்து கொண்டார். நிறைவாக, நூலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.  

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி