16 December 2014 3:56 pm
‘நெல்லை குமார கபிலன் அறகட்டளை’ சார்பில் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழாவும் கவிஞர் குமார சுப்பிரமணியம் எழுதிய ‘பொதிகைச் சாரல்’ எனும் மரபுக்கவிதை நூல் வெளியீட்டு விழாவும் பாளையங்கோட்டை இந்திய செஞ்சிலுவைச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எஸ்.ஏ. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். நூலினை மாநில தமிழ் சங்க தலைவர் மு.ப.அழகிய நம்பி வெளியிட, திருச்சி பா.பன்னீர் செல்வம் பெற்று கொண்டார். விழாவில் மேனாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முனைவர் கடவூர் மணிமாறன், பேராசிரியர்கள் ச.சங்கர நாராயணன், வே.மாணிக்கம், சௌந்தர மகாதேவன், பாவலர் அழகரசன், அமுதவாணன் ஆலடி அருணா, மருத்துவர் மகாகிருட்டிணன், கவிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலாசிரியர் கவிஞர் குமார சுப்பிரமணியம் ஏற்புரையாற்றினார். கவிஞர் பாப்பாக்குடி. இரா.செல்வ மணி நன்றியுரையாற்றினார். வழக்குரைஞர் துரை ஆரிச்சன், முரசொலி முருகன், கவிஞர்கள் பாப்பாக்குடி முருகன், சந்தனகுமார், பொன்.வேலுமயில், வி.முத்து ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 2014 ஆம் ஆண்டு ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாமக்கல் தமிழன்பன், ப.முத்து சாமி, இரண்டாம் பரிசு பெற்ற திருப்பூர் புலவர் நாக ஆறுமுகம், மூன்றாம் பரிசு பெற்ற கோவை.கே.பி.பத்பநாபன் ஆகியோருக்கு முறையே 2500, 1500, 1000 உருபா ரொக்கப்பரிசு வழங்கப் பெற்றது. "