தமிழர் பண்பாட்டுத் தளிர்கள் - தமிழ் இலெமுரியா

11 September 2013 12:41 am

மாற்றுப் பெறும் நாகரிகச் சூழலில், தமிழ் மொழி மற்றும் கலை இலக்கியப் பண்பாட்டு விழுமியங்கள் காக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கில் ஈரோடு கருங்கல் பாளையத்தில் கலைத்தாய் அறக்கட்டளை இயங்கி வருகின்றது. கலைத்தாய் அறக்கட்டளையின் சார்பாக பள்ளி மாணவ, மாணவியருக்கும், கலை ஆர்வலர்களுக்கும் தமிழின் தொன்மைப் பண்பாட்டு வடிவங்களாக விளங்கும் கலைகளான சிலம்பம், சைலாத் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கோலாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், தப்பிச் சுத்து, பிச்சுவா, கேடயம், கத்தி சண்டைகள், கட்டாரி, மான் கொம்பு, சுருள் வாள் போன்ற கருவிகளில் பயிற்சியளித்து வருகின்றனர். இதில் சற்றொப்ப 200 மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்று ஆர்வமுடன் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களாக விளங்குவது போற்றத்தக்க ஒன்றாகும். இதன் ஒருங்கிணைப்பு மற்றும் பயிற்சியாளராக மாதேசுவரன் மற்றும் ஆர்வலர்களாக சக்தி, உமாபதி, சரவணன் ஆகியோர் செயல்பட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி