9 October 2013 11:34 pm
தமிழர் பண்பாடு, வரலாறு, சிந்தனை போற்றும் வகையில் ஈரோடு நகரில் செயல்பட்டு வரும் பாட்டாளிகள் படிப்பகத்திற்கு மும்பை இலெமுரியா அறக்கட்டளை" சார்பில் தமிழர் நலம் பேணும் 50க்கும் மேற்பட்ட நல்ல நூல்கள் பல அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பாட்டாளிகள் படிப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் "தமிழ் இலெமுரியா" முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் கலந்து கொண்டு படிப்பக நிருவாகிகளிடம் நூல்களை வழங்கினார். இதே போன்று நவயுகம் அறக்கட்டளை சார்பில் ரூ. 10, 000 மதிப்புள்ள நூல்களும், தமிழ் ஆர்வலர் கண.குறிஞ்சி சார்பில் ரூ. 6, 000 மதிப்புள்ள நூல்களும், பெரும்பாறை சண்முகம் சார்பில் ரூ. 10, 000 மதிப்புள்ள நூல்களும், அக்னி ஸ்டீல் நிறுவனம் சார்பில் ரூ. 5, 000 மதிப்புள்ள நூல்களும் பாட்டாளிகள் படிப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. விழாவில் "தமிழ் இலெமுரியா" புரவலர் அழகன் கருப்பண்ணன் கலந்து கொண்டு உரையற்றினார். பாட்டாளிகள் படிப்பக நிருவாகிகள் பலர் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர். பாட்டாளிகள் படிப்பகத்தின் நிருவாகி உமாபதி அனைவருக்கும் நன்றி கூறினார்."