16 March 2014 12:47 am
புதுக்கோட்டை மாட்சிமைதங்கிய மன்னர் கல்லூரி, தமிழாய்வுத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், நிதி நல்கையில் செம்மொழித் தமிழ்க் கூறுகள்: தொன்மை காலம் முதல் அண்மைக் காலம் வரை என்ற மெய்ப் பொருளில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றதது. இக்கருத்தரங்கினை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை கருத்தரங்க மைப் பொருள் தொடக்கவுரை நிகழ்த்தினார். விழாவிற்கு வந்திருந்தோரைத் தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் சி.சேதுராமன் வரவேற்றுப் பேசினார். முதல்வர் மு.சின்னையா தலைமை வகித்தார். தேர்வு நெறியளர் முனைவர் மா.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.மாதவன் கருத்தரங்கப் பொருண்மையுரையாற்றினார். தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமத்தின் செயலாளர் புனிதா கணேசன் ஒளிவிளக் கேற்றி வைத்தார். கைக்குறிச்சி, சிறி பாரதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் வீ.வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத் துறைப் பேராசிரியர்களும், மாணவர்களும் செய்திருந்தனர்.