16 March 2014 12:43 am
சென்னையில் நடைபெற்ற மருத்துவ அறிவியல் மாநாட்டில் தோழர் தோப்பூர் சுப்ரமணியம் விருது வழங்கி பெருமைபடுத்தப்பட்டது. இதில் கவிஞர் வதிலை பிரதாபனுக்கு தியாகி டி.எம்.சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் பத்மசிறி நல்லி குப்புசாமி (செட்டியார்) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்., டாக்டர் கமலி சிறிபால் தலைமை வகித்த நிகழ்வில், திருமதி மணிமேகலை கண்ணன் வரவேற்புரையாற்றினார். நெல்லை மாவட்டம் கீலக்கலங்கல்லில் உள்ள ஜீவா படிப்பகத்தின் ஆண்டு விழாவில், இலக்கிய பேராசான் தோழர் ஜீவானந்தம் நினைவாக ஜீவா விருது" வழங்கப்பட்டது. சிறந்த கவிதைகள், கட்டுரைகள், புதினங்கள் என சமுக அக்கறையுடன் எழுதப்பட்த சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்பெற்ற விருதுகளுக்குரிய தேர்வுக் குழுவினரின் இறுதி முடிவின் படி, திரைப்படப் பாடலாசியர் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய "உலாப் போகும் ஓடம்" கவிதைத் தொகுப்பும், கவிஞர் வதிலை பிரதாபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" கட்டுரை தொகுப்பும், எழுத்தாளர் கோவில்பட்டி பூமணி எழுதிய "அஞ்ஞாடி" என்ற புதினமும் சிறந்த படைப்புகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வழங்கினார்கள். ஜீவா படிப்பகத்தின் தலைவர் நவனீத கிருஷ்ணன், செயலாளர் சண்முக வேல், பொருளாளர் ஜீவனநிஞ்சனா, பேராசிரியர் ஆஞ்சேல், பேராசிரியர் கல்பனா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து நடத்தினர். "