18 August 2015 10:59 am
இன்றைய நிலையை நோக்கின் வட மொழியை அறவே நீக்குவதென்பது தெலுங்கு மொழிக்கு அரிதாகும்; கன்னட மொழிக்கோ மிகவும் அரிது; மலையாள மொழிக்கோ அரிதினுமரிது. இம்மொழிகள் கணக்கு வழக்கில்லாமல் வட சொற்களை எடுத்தாண்டு வந்துள்ளமையாலும் அச்சொற்களின் உதவியை நாடுவதே வழக்கமாகக் கொண்டுள்ளமையாலும் தத்தம் சிறப்புப் பண்புகளை இழந்து, தனித்து நின்றியங்கும் ஆற்றலையும் இழந்து நிற்கின்றன. ஆனால் திராவிட மொழிகள் அனைத்திலும் மிகவும் திருந்திய பண்பட்ட நிலையிலுள்ள தமிழ் மொழியோ, வேண்டுமென்றால், வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்திருப்பதோடன்றி அவற்றின் உதவியில்லாமல் மிகவும் மேம்பட்டு வளமுற்று மிளிரும் ஆற்றலும் வாய்ந்ததாகும்"- கால்டுவெல். (1856 ஆம் ஆண்டு ஐரோப்பிய அறிஞர் இராபர்ட் கால்டுவெல் வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) எனும் ஒப்பற்ற ஆய்வு நூலிலிருந்து…)"