ஸ்பெயின் - தமிழ் இலெமுரியா

14 October 2013 8:34 am

முழு இறையாண்மைபெற்ற ஸ்பெயின் அரசாட்சி என்றழைக்கப்படும் ஸ்பெயின் நாடு ஐரோப்பாவிலுள்ள ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிறு நிலப்பகுதியான சிப்ரல்டரைத் தவிர்த்து, மெடிட்டேர்ரனீன் பெங்கடலாலும், வடக்கு மற்றும் வட கிழக்கில் பிரான்சு, அண்டோரா ஆகிய நாடுகளும், மேற்கே போர்ச்சுகளும், வட மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலாலும் சூழ்ந்துள்ளன. ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான எல்லைப்பகுதி சற்றொப்ப 1,214 கி.மீ ஆகும். இதன் மூலம் இவ்விரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மிக நீண்ட எல்லைகளைக் கொண்ட நாடாக விளங்குகின்றன. சற்றொப்ப 1,95,364 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 4,67,04,314 ஆகும். இங்கு ஆட்சி மொழியாகவும், அலுவலக மொழியாகவும் ஸ்பானிசு திகழ்கிறது. நாணயம்: ஐரோப்பிய யூரோ ஆகும். நாட்டின் தலைநகராக மாட்ரிட் (Madrid) விளங்குகிறது. ஸ்பெயின் நிலப்பரப்பை ஒப்பிடுகையில், மேற்கு ஐரோப்பாவின் 2வது பெரிய நாடாகவும், ஐரோப்பா கண்டத்தின் 5வது பெரிய நாடாகவும் விளக்குகிறது. முதன் முதலில் நவீன கற்கால மனிதர்கள் 35,000 ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியன் தீபகற்பத்தில் குடியேறினர். கி.மு 200 வாக்கில் ரோமானியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், இக்குழு மக்கள் ஹிசுபானியா என அழைக்கப்பட்டனர். 10 ஆம் நூற்றாண்டுகளில் செர்மனியப் பழங்குடியினர் அதிகமாகக் குடிபெயர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஐபீரியன் தீபகற்பத்தின் தென் பகுதியில், வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூர்கள் எனப்படும் இசுலாமியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் இசுலாமியப் பேரரசு உருவானது. பின்னர் சிறு சிறு அரசுகளான காசுடில், அரகான், போர்ச்சுகல் போன்ற கிறித்தவ அரசுகள் மீண்டும் தங்கள் பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்தனர். இதன் மூலம் ஐம்பீரியன் தீபகற்பத்தின் வடக்குப் பகுதி கிறித்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. கி.பி.1479 ஆம் ஆண்டு அரகானைச் சேர்ந்த ஐந்தாம் ஃபெர்னாண்டுக்கும், காசுடில்லைச் சேர்ந்த முதலாம் இசுபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்துக்குப் பின், ஸ்பெயின் மீண்டும் ஒன்றுபட்ட நாடாக உருவனது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கி.பி 1492 ஆம் ஆண்டில் கடைசி இசுலாமிய அரசான கிரானடாவும் மீட்கப்பட்டது. கொலம்பசு அமெரிக்காவை சென்றடைந்த அதே ஆண்டில் ஸ்பெயினில் கடைசி மூர்களின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, ஐரோப்பாவின் வலிமையான, செல்வாக்கு மிக்க பேரரசாக உருவானது. ஒன்றரை நூற்றாண்டு காலம் உலகின் முதன்மை வல்லரசுகளில் ஒன்றாகவும், மூன்று நூற்றாண்டு காலம் உலகின் மிகப் பெரிய கடல் கடந்த பேரரசாகவும் விளங்கியது.  16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட போர்களும், இதர சிக்கல்களும் ஸ்பெயினை ஒரு தாழ்வான நிலைக்குக் கொண்டுச் சென்றன. இந்த கால கட்டத்தில்தான் 1807 ஆம் ஆண்டு மாவீரன் நெப்போலியனுக்கும், ஸ்பெயின் அதிபருக்குமிடையே ஓர் இரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கும், போர்ச்சுகளுக்கும் எதிராக போரிடுவது என கையெழுதிடப்பட்டது. நெப்போலியனின் படைகள் போர்ச்சுகளைக் கைப்பற்றுவதற்காக ஸ்பெயினுக்குள் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் நெப்போலியன் படைகள் அதற்கு மாறாக, ஸ்பெயினின் முக்கியக் கோட்டையை முற்றுகையிட்டு ஸ்பெயினை தன் வசப்படுத்தியது. இவ்வாறு நெப்போலியன் ஸ்பெயினைக் கைப்பற்றியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் இதுவே பல விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்து, பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டின் அரசியலிலும் உறுதியின்மையை உண்டாக்கியது. இதன் விளைவாக நாளடைவில் ஸ்பெயின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோழியது. இருப்பினும் முதல் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக 1931 ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு ஸ்பெயின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாறினாலும், 1978 ஆம் ஆண்டில் தான் ஸ்பெயின் புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டது. 1978 டிசம்பர் 6 ஆம் நாள் நடைபெற்ற தேசிய மக்கள் கருத்தறியும்" வாக்கெடுப்பில், புதிய அரசமைப்புச் சட்டம் 88% வாக்குகளைப் பெற்றது. இந்த அரசமைப்புச் சட்டத்தின் படி, ஸ்பெயின் 17 தன்னாட்சிச் சமூகங்களையும், 2 தன்னாட்சி நகரங்களையும் உருவாக்கியது. ஸ்பெயின் நாட்டின் தற்போதைய மொழிகள், மதம், சட்ட அமைப்பு ஆகியவற்றில் பெரும்பான்மையானவை ரோமானிய ஆட்சிக் காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் கடந்த இடையூறற்ற ஆட்சிக் காலம், இன்றும் ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கதை ஏற்படுத்தி வருகின்றன. ஸ்பெயின் இரும்பு, பாதரசம், நிலக்கரி ஆகிய கனிம வளங்களைப் பெற்றுள்ளதுடன், லைன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை உலகில் மிகப் பெரிய அளவில் தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி