22 May 2013 1:45 pm
சிங்கப்பூர் குடியரசு, தென் கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு. மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனைக்கு அருகே அமைந்திருக்கும் இந்த நாடு சிங்கப்பூர் தீவும் மற்றும் 60 சிறு தீவும் கொண்டவை. பரப்பளவு: 264 ச.மைல் (683ச.கி.மீ). மக்கள் தொகை சற்றொப்ப 50,00,000. தலைநகரம்: சிங்கப்பூர். நான்கில் ஒரு பங்கினர் சீன இனத்தவர், மற்றவர்களில் பெரும்பாலோர் மலாய்காரர்கள். இந்தியர்கள். மொழிகள்: ஆங்கிலம், சீனம் (மாண்டரின்), மலாய் மற்றும் தமிழ் (அனைத்தும் ஆட்சி மொழிகள்). மதங்கள்: முக்கியமாக, கன்ஃபுஷியம், பவுத்த சமயம் மற்றும் டாவோயிசம், இதைத் தவிர இசுலாமிய, கிறித்தவ, இந்து சமயங்களும் பின்பற்றப்படுகின்றன. நாணயம்: சிங்கப்பூர் டாலர், மலைப் பாங்கான இத்தீவின் சுமார் மூன்றில் இரண்டு பங்கு கடல் மட்டத்திற்கு மேல் 50 அடிக்கும் (15மீ) குறைவான உயரத்தில் உள்ளது. மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய இரண்டு சதவிகிதம் தான் பயிரிடற்கேற்றது என்றாலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலில் உலகிலேயே முன்னணி நிலக்கூறு (பிரதேசங்)களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இதன் பொருளாதாரம் பன்னாட்டு வணிகம் மற்றும் நிதியை ஆதாரமாகக் கொண்டது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட வர்த்தக வங்கிகளில் பெரும்பான்மையானவை வெளிநாட்டைச் சேர்ந்தவை. ஆசிய டாலர் சந்தையி(மார்க்கெட்டிங்)ன் தலைமையகம் இங்கு அமைந்திருக்கிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பில் உலகின் மின்னணி நாடுகளில் ஒன்று. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்ற எந்த நாட்டையும் விட தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள நாடு. சிங்கப்பூர் ஓரவைச் சட்டமன்றத்தைக் கொண்ட குடியரசு. மாநிலத்தின் தலைநகராகக் குடியரசு தலைவரும் அரசாங்கத் தல்;ஐவராக பிரதமரும் விளங்குகின்றனர். மீனவர்களும், கடற்கொள்ளைக்காரர்களும் நீண்ட காலம் வசித்து வந்த இந்தத் தீவு, ஜாவாவுக்கும் பின்னர் சயாமுக்கும் கிடைத்தபோது, சிறீவிஜயர்களின் சுமத்திர பேரரசி(சாம்ராஜ்யத்தின்)ன் புறக்காவல் பகுதியாக 14ஆம் நூற்றாண்டு வரையில் இருந்தது.
15ஆம் நூற்றாண்டில் மலாக்கா பேரரசி(சாம்ராஜ்யத்தின்)ன் பகுதியாக மாறியது. 16ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியைப் போர்ச்சுகீசியர்கள் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். 17ஆம் நூற்றாண்டில் இவர்களுக்குப் பின் டச்சுக்காரர்கள் இங்கு ஆட்சி செய்தனர். இது 1819இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டதால், நீர்ச்சந்தி குடியேற்றவர்க¤ன் பகுதியாகவும், தென்கிழக்கு ஆசியாவில் பிரிட்டிஷ் காலனி ஆட்சி நடவடிக்கை மையமாகவும் மாறியது. இரண்டாம் உலகப் போரின் போது (1942-45) ஜப்பானியர்கள் இந்தத் தீவைக் கைப்பற்றினர். 1946இல் இது மன்னராட்சியின் கீழ் வந்தது. 1959இல் முழு சுய உள்ளாட்சி அரசு முறையைப் பெற்றது. 1963இல் மலேசியாவின் ஒரு பகுதியானது. 1965இல் விடுதலை அடைந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கச் செயல்பாடுகளில் சிங்கப்பூர் முதன்மைப் பங்கு வகிக்கிறது. விடுதலை அடைந்த பிறகு 30ஆண்டுகள் வரை இந்த நாட்டைத் தன் ஆளுமையில் வைத்திருந்தவர் லீ க்வான் யூ. 1990களின் இடையில் ஆசியப் பொருளாதார நெருக்கடிப் பிரச்சனைகள் ஏற்பட்ட போது, இதன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால், இது பல அண்டை நாடுகளைப் போல துன்பப்படாமல் வெகு எளிதில் சீரடைந்தது.முழுத் தீவையுமே பொதுவான்தொரு ந்கர அரசாகக் கருதும் அளவுக்கு இந்நகரின் ஆளுகை இத்தீவின் மேல் விளங்குகிறது. பல பூங்காக்களையும், நிழற்சாலைகளையும் கொண்டிருப்பதால் இது தோட்ட நகரம் என்றறியப்படுகிறது. ஆசியாவின் பல பகுதிகளிலிருந்து குடியேரியவர்கள் கொண்டு வந்த பண்பாட்டு அடையாளங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் இதனை மறு உறுவாக்கம் செய்தார். 1833இல் நீர்ச்சந்தி குடியேற்றங்களின் தலைநகரமானது. துறைமுகமாகவும், கப்பல் படகுத் தளமாகவும் வளர்ச்சி பெற்றது. இப்போது இது உலகின் பெரிய வணிக மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வளங்கொழிக்கும் வங்கி, காப்பீடு மற்றும் தரகு கம்பெனிகளால் இது தென் கிழக்கு ஆசியாவின் முதன்மை வணிக மற்றும் நிதி நடுவமாக விளங்குகிறது.
சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும். சிங்கப்பூரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவில் தமிழர்களால் கட்டப்பட்டதாகும். சிங்கப்பூரின் தற்போதைய குடியரசுத் தலைவர் எஸ்.ஆர்.நாதன் என்றழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் ஆவார். கடந்த செப்டம்பர் 1, 1999ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பதவி வகித்து மீண்டும் ஆகஸ்ட் 18, 2005 மறுபடியும் தேர்வு செய்யப்பட்டவராவார். இந்த ஆண்டு இவருடைய பதவிக் காலம் முடிவடைவதையொட்டி ஓய்வு பெற விரும்புகின்றார்.
சிங்கப்பூரிலிருந்து “தமிழ் முரசு, சிங்கை நேசன், தங்கமீன்” போன்ற எண்ணற்ற இதழ்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
(செப்டம்பர் 2011)