17 November 2016 7:25 pm
1922 நவ.1, உலகின் முதல் வானொளி உரிமம் விற்பனைக்கு வந்தது. இதன் விலை 10s (50p/ 90சென்ட்ஸ்)1984 நவ.1, இந்திய தலைமையமைச்சராக இராஜீவ் காந்தி பதவியேற்றார்.1903 நவ.2, டெய்லி மிரர் நாளிதழ் பிரிட்டனில் பிரசுரிக்கப்பட்டு பெண்களுக்கான நாளிதழாக சந்தை படுத்தப்பட்டது.1953 நவ.2, பாகிசுதான் இசுலாமிய சட்டத்தை ஏற்றுக் கொண்டதாக (பின்பற்றுவதாக) அறிவிக்கை செய்தது.1984 நவ.2, ஜோசப் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அலிலுயேவா தனது சோவியத் குடியுரிமையை இழந்து 17 ஆண்டுகளுக்குப் பின், தன் வீட்டிற்கு (நாட்டிற்கு) திரும்பினார்.1706 நவ.3, இத்தாலியிலுள்ள அப்ருசோ எனும் நகரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பதினைந்தாயிரம் பேர் உயிரிழந்தனர்.1980 நவ.4, 40ஆவது அமெரிக்க அதிபராக ரொனால்டு ரீகன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.1813 நவ.6, ஸ்பெயினிடமிருந்து மெக்சிகோ விடுதலை பெற்று சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது.1888 நவ.7, ஒளி புகும் (ஊடுருவும்) ஊடகத்தின் வழியே ஒளி பரவும் (சிதறும்) போது ஒளியின் மாறிவரும் அலை நீளத்தை கண்டறிந்தற்காக 1931 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்த நாள்.1960 நவ.9, ஜான் எஃப்.கென்னடி அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.1970 நவ.9, பிரெஞ்சு அதிபர் சார்லஸ் டி கோல் மறைந்தார்.1483 நவ.10, மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்படும் ஜெர்மனிய மதச் சீர்திருத்தவாதி மார்ட்டின் லூதரின் பிறந்தநாள்.1990 நவ.12, சிறந்த கல்வியை வழங்கக் கோரி 2,00,000 க்கும் மேற்பட்ட பிரெஞ்சு பள்ளி மாணவர்கள் பாரிசில் நடத்திய ஆர்பாட்டம் மிகப் பெரிய கலவரமாக மாறியது.1922 நவ.15, முதல் திட்டமிட்ட ஒளிபரப்பு இலண்டன் கடற்கரையில் அமைந்துள்ள மார்க்கோனி மாளிகையிலிருந்து ஒளிபரப்பப்பட்டது.1880 நவ.17, இலண்டன் பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த முதல் 3 பிரிட்டானிய பெண் பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.1904 நவ.17, சவுத்தாம்ப்டனிலிருந்து வைய்ட் தீவு வரையில் நீருக்கடியில் முதல் முறையாக நீர்மூழ்கிப் பயணம் மேற்கொள்ளப் பட்டது.1970 நவ.17, ஆளில்லா சோவியத் விண்கலம் சந்திரனில் 17 நிலப்பகுதியின் பிறை வடிவத்தை வெளியிட்டது.1990 நவ.17, இரண்டாம் உலகப் போரின் கைதிகள் மிகப் பெரிய புதைகுழியில் புதைக்கப் பட்டிருந்ததை தாய்லாந்தில் அமைந்துள்ள குவாய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பாலத்தின் வழியே கண்டறியப்பட்டது.1919 நவ.19, இத்தாலியில், பெனிட்டோ முசோலினியும் 37 பாசிசர்களும் சோசியலிச தேர்தலை எதிர்த்து நடத்திய கலகத்திற்காக சிறைபிடிக்கப் பட்டனர்.1925 நவ.19, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 4 மாத சிறை தண்டனை வழங்குவதற்கான தீர்மானத்திற்கு பிரிட்டிசு நாடாளுமன்றத்தில் வாக்குகள் பெறப்பட்டன. 1985 நவ.20, மைக்ரோ சாஃப்ட் எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட விண்டோ 1.0 மென்பொருளில் கணினிக்கான பல்பணி பயனர் இடைமுகத்தை உருவாக்க முயற்சித்தனர்.2003 நவ.20, சர்ச்சைக்குரிய புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் சிறாரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டார். ஆனால் அவர் தான் குற்றமற்றவன் என மன்றாடினார்.1925 நவ.20, ஜான் எஃப்.கென்னடியின் சகோதரரும் அமெரிக்க அரசு சட்ட வழக்கறிஞருமான இராபர் எஃப்.கென்னடியின் பிறந்தநாள்.1928 நவ.26, பிரிட்டனின் முதல் இரட்டை குழந்தைகள் மான்செஸ்டர் நகரில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தனர்.1990 நவ.26, சிங்கப்பூரின் அதிபர் லீ குவான் யூ தனது 26 ஆண்டுகால அலுவல் பணியிலிருந்து (இராஜினாமா) விலகினார்.1991 நவ.27, இலண்டனிலுள்ள கிறிஸ்டி எனுமிடத்தில் ‘15 ஆம் நூற்றாண்டு பைபிள்’ நியூயார்க்கின் பழம்பொருள் புத்தக விற்பனையாளரிடம் 1.1 மில்லியன் யூரோபியன் பவுண்டிற்கு விற்கப்பட்டது.1909 நவ.28, பாரிசில் எட்டு வாரம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு" வழங்க அனுமதி கோரி சட்டம் நிறை வேற்றப்பட்டது.1978 நவ.28, ஈரானிய அரசாங்கம் மத ஊர்வலங்களுக்கு தடை விதித்தது.1641 நவ.29, முதல் ஆங்கில நாளிதழ் வெளியிடப் பட்டது.1919 நவ.30, பிரெஞ்சுத் தேர்தலில் முதன் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.1988 நவ.30, நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக வரவிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்திற்கு நுழைவுச் சான்று (விசா) வழங்க அனுமதி மறுக்கப்பட்டது."