17 March 2015 8:45 pm
நத்து சிங் ராத்தோர்1947 ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலையடைந்த பிறகு சட்டப்படி இந்திய தலைமையமைச்சரான சவகர்லால் நேரு, இந்திய முதல் இராணுவ ஜெனரலை நியமிப்பதற்காக மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இராணுவத் தலைமையில் நமக்கு போதிய அனுபவமில்லாததால், இந்திய இராணுவத்தின் ஜெனரலாக ஒரு பிரிட்டிசு அதிகாரியை நியமிக்கலாம் என நினைக்கிறேன்" என்று நேரு கூறினார். நாம் பிரிட்டிசாரிடமிருந்து கற்றுக் கொண்டது பணிபுரிய மட்டுமே! அரிதாகவே வழிநடத்தும் தலைமையை (ஆளுமையை) பயின்றுள்ளோம் எனும் நேருவின் உடன்பாட்டிற்கு சீருடை அணிந்த இராணுவத்தினரும் பிற அதிகாரிகளும் ஆம் என்றவாறே தலையாட்டினர். அச்சமயம் நத்து சிங் ராத்தோர் (Nathu Singh Rathore) எனும் மூத்த அதிகாரி ஒருவர் பேச அனுமதிக் கோரினார். நேரு அவருடைய குறுக்கீட்டை எண்ணி சற்று ஆச்சரியப்பட்டாலும் அவரை வெளிப்படையாக பேச அனுமதித்தார். "சார், நாம் கூட இதற்கு முன் ஒரு நாட்டை ஆளாக்கூடிய அனுபவம் துளியும் இல்லாதவர்கள்தான். அப்படியானால் நாம் ஏன் இந்தியாவின் முதல் தலைமையமைச்சராக ஒரு பிரிட்டிசு அதிகாரியை நியமிக்கக் கூடாது?" என ராத்தோர் முன்மொழிந்தார். உங்களால் ஒரு குண்டூசி விழும் ஒலியை கேட்க முடிந்திருக்கும். அவ்வளவு அமைதி! சிறிது நேர இடை நிறுத்ததிற்கு பிறகு நேரு ராத்தோரைப் பார்த்துக் கேட்டார். "இந்திய இராணுவத்தின் முதல் ஜெனரலாக இருப்பதற்கு நீங்கள் தயாரா?". ராத்தோர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதுடன், நம் இராணுவத்தில் மிகுந்த தகுதி பெற்ற திறமையான என்னுடைய மூத்த அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் கரியப்பா (Cariappa) இருக்கிறார் என பெருமையாகக் கூறினார். இவ்வாறே சிறந்த அறிவாற்றல் கொண்ட ஜெனரல் கரியப்பா நம் இந்திய இராணுவத்தின் முதல் ஜெனரலாகவும், ராத்தோர் முதல் லெப்டினென்ட் ஜெனரலாகவும் உருவாகினர்.(இத்தகவலை வழங்கிய ஒய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் நிரஞ்சன் மாலிக்கிற்கு நன்றி)தயான்சந்த் யார் இந்த தயான்சந்த்? ஏன் மக்கள் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வற்புறுத்துகின்றனர்? என மட்டைப் பந்தாட்டத்தில் மூழ்கியிருக்கும் மக்களின் சிந்தனைக்காக…1. இந்திய விடுதலைக்கு முன் இந்தியா கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 3 தங்கப் பதக்கத்தை வென்றது. நாம் ஒலிம்பிக்கில் மொத்தம் 48 போட்டிகள் விளையாடி, அவை அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். 2. கடந்த 20 ஆண்டு ஹாக்கி வரலாற்றில் இந்தியா ஒரு தோல்வியடையா நாடாகத் திகழ்கிறது. அமெரிக்காவுடனான அனைத்து போட்டிகளிலும் நாம் அவர்களை தோற்கடித்ததன் விளைவாக அந்நாடு அடுத்த சில ஆண்டுகளுக்குத் தங்கள் அணி ஹாக்கி விளையாடவே தடை விதித்தது. இது எவ்வளவு பெரிய சாதனை என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?3. திரு தயான்சந்த் -& இன் மிகப் பெரிய விசிறியாகிய (ரசிகரான) ஜெர்மன் அதிபர் ஹிட்லர், அவருக்கு ஜெர்மன் குடியுரிமை அளிப்பதாகவும், அவரை ஜெர்மன் நாட்டு அணிக்காக விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் அதற்காக அவருக்கு ஏராளமான பணம் தருவதாகவும் உறுதியளித்தார்! ஆனால் "தான் பணத்திற்காக விளையாடவில்லை! நாட்டிற்காக விளையாடுகிறேன்" எனக் கூறி ஹிட்லரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.4. அவர் ஹிட்லரை தன்னுடைய ரசிகராகக் கவர்ந்தது எப்படி எனத் தெரியுமா? ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்காக தயான் சந்த் ஜெர்மனி சென்றிருந்த போது, ஜெர்மன் பந்தாட்ட இலக்கு பாதுகாவலரால் (கோல் கீப்பரால்) காயமுற்றார்! அதற்கு திரும்ப பழி வாங்க வேண்டுமென அனைவரின் முன்னிலையில் தன் அணியினரிடம் உத்தரவிட்டார்! யாராவது ஹிட்லரின் முன்னிலையில் ஜெர்மன் குடிமகன் யாரிடமாவது சவால் விட இயலுமா! என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். பின்னர் அப்போட்டியில் இலக்கு பாதுகாவலரைக் கடந்து பந்தை விரட்டி எடுத்துச் சென்றார். ஆனாலும் பந்தை கோல் வலைக்குள் அடித்து மதிப்பெண் பெறுவதை நிராகரித்தார். இது ஜெர்மனிக்கு மிகுந்த அவமானமாக அமைந்தது. இதுவே ஹிட்லரைக் கவர்ந்த நிகழ்வாகும்.5. ஒரு போட்டியில் தயான்சந்த்&ஆல் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. உடனே அவர் கோல் கம்பத்தின் நீளம் குறைவாக இருப்பதாகவும் அதனாலேயே தன்னால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை எனவும் நடுவரிடம் வாதிட்டார். இதனால் பரிசோதித்து பார்த்த போது அவர் கூறியது உண்மை எனக் கண்டறியப்பட்டு, கோல் கம்பத்தின் நீளம் அதிகரிக்கப்பட்ட பின், 8 கோல்களை அடித்து மதிப்பெண் பெற்று சாதித்தார்.6. விடுதலைக்கு முன்பே இந்தியக் கொடியை இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனியிலும் ஏற்றிக் காட்டிய ஒரே இந்திய வீரர் தயான்சந்த் ஆவார். நாம் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த போது தேசியக் கொடியை இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லாத போதிலும், அவர் தன்னுடைய இரவு நேர உடைக்குள் மறைத்து வைத்து ஜெர்மன் கொண்டு சென்று ஏற்றி பறக்க விட்டார். இதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இச்செயலுக்காக பிரிட்டிசு அரசாங்கம் அவருக்கு சிறை தண்டனை அறிவித்த போதிலும் ஹிட்லர் அவற்றை தடுத்து நிறுத்தினார்.7. இவருடைய கடைசி காலத்தில் உணவுக்குக் கூட பணமில்லாத மிகுந்த ஏழையாக வாழ்ந்தார். அமெரிக்காவிற்கும் ஜெர்மனிக்கும் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. ஆனாலும் "நான் அவர்களுக்கு பயிற்சியாளராக இருப்பேன் எனில், இந்திய அணி தனது தொடர் வெற்றியை, ஹாக்கி சாம்பியன் பதவியை இழக்க நேரிடும்" எனக் கூறி பயிற்சியாளராக செல்ல மறுத்து விட்டார். இது அவருடைய சொந்த நாடு அவருக்கு எதையும் வழங்க வில்லை என்பதற்கு முரணாக இருந்தது. இந்திய இராணுவம் மட்டுமே அவரது இறுதி காலத்தில் உதவியாக இருந்தது.8. ஒருமுறை அகமதாபாத்தில் நடந்த ஹாக்கி போட்டியைக் காண விரும்பினார். ஆனால் இவரை மைதானத்தின் அரங்கினுள்ளேயே யாரும் அனுமதிக்க வில்லை. ஏனெனில் அவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. இப்போட்டியில் சவகர்லால் நேரு கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது!9. இறுதியாக மட்டை பந்தாட்டத்தின் (கிரிக்கெட்) கடவுளாக வருணிக்கப்படும் சர் டான் பிராட்மேன் "நான் தயான் சந்த்தின் தீவிர ரசிகன் ஆவேன். அவர் நான் எடுக்கும் ஓட்டங்களை (ரன்களை) விட எளிதில் கோல் மதிப்பெண்களை எடுக்கக் கூடியவர்!" எனக் கூறியுள்ளார். மேற்கூறியவற்றிலிருந்து "பாரத ரத்னா" விருதிற்கு முழு தகுதி பெற்ற முதல் விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டிய தயான் சந்த்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அரசின் விதிமுறைகளின் படி இவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்காதது மிகுந்த ஏமாற்றமே! ஆனால் இவருக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் 400க்கும் அதிகமான விருதுகளை வழங்கிப் பாராட்டியுள்ளது இவர் பெருமையை பறை சாற்றும். இதுவே இந்திய விடுதலைக்கு முன்பாக இருந்திருந்தால் இவர் மேஜர் தயான் சந்த் என அழைக்கப்பட்டிருப்பார்.இவருக்கு நம் வீர வணக்கங்கள். "