15 December 2016 5:03 pm
1926 – 27 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் குளிர்காலம் நிலவிக் கொண்டிருந்த நேரம். தெற்கே அமைந்துள்ள மிசிசிப்பி ஆற்றுப் படுகையில் பெய்த கனமழையால் கரையில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓக்லஹோமா, கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி ஆகிய பகுதிகள் வெள்ள அபாயப் பகுதிகளாக எச்சரிக்கப் பட்டு அங்கு வசித்தவர்கள் வெளியேறத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்நதிக் கரை உடைசலிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலை தடுப்பு அரண் ஒன்று அமெரிக்க இராணுவ பொறியாளர்களால் கட்டப்பட்டது. மக்கள் குடியிருப்பதற்கு ஏதுவாக இவ்வரண் வெள்ள நீரை தடுத்து நிறுத்தும் என உறுதி கூறியிருந்தனர். ஆனால் 1927, ஏப்ரல் 15ஆம் நாள் புனித வெள்ளி அன்று ஆற்றின் கரை உடைந்தது. ஏறத்தாழ 27,000 மைல் (70,000 கி.மீ2) தூரம் வரை வெள்ள நீர் சீறிப் பாய்ந்தது. வெள்ள நீர் சூழ்ந்ததில் 3,30,000 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் உட்பட மொத்தம் ஏழு இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஒரே நேரத்தில் ஏழு இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்தது வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், வெள்ள நீர் சேதார இடர்பாட்டின் போது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெரிய வந்தது. அகதிகள் முகாமிலும் மீட்புப் பணிகளின் போதும் துப்பாக்கி முனையில் பணிபுரிய கட்டாயப் படுத்தப்பட்டனர் என்பதே அவ்வறிக்கை.இன்று மிசிசிப்பியில் மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான மைல்கள் வரையில் அலை தடுப்பு அரண் கட்டப்பட்டு பராமரித்து வருகின்றனர்.அமில மழை மழையில் அடை மழையும் ஆலங்கட்டி மழையும் நாம் அறிந்ததே! அது என்ன அமில மழை? பல்வேறு வகைத் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள இடங்களில் அவை வெளியேற்றும் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் கலந்திருக்கும். வளி மண்டலத்தில் இப்புகை மண்டியிருக்கும் போது மழை பெய்தால், நைட்ரஜன் ஆக்சைடு நீரில் கரைந்து நைட்ரிக் அமிலமாகவும் கந்தகப் புகை நீரில் கரைந்து கந்தக அமிலமாகவும் மழை நீருடன் விழும். இதற்கு அமில மழை என்று பெயர். அமில மழையால் பயிர்கள், தாவரங்கள், உயிரினங்கள் ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டு அழிந்துவிடும். கட்டடங்களும் அரிக்கப்பட்டுச் சேதமாகி விடும்.ஜெர்மனியில் தன் வலிமையை நிலைநாட்டிய இட்லர் ஒரு புகழ்பெற்ற இராணுவ அதிகாரியாக விளங்கிய பவுல் வொன் கிண்டன்பர்க் 1925 ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இட்லரின் நாசிசக் கட்சியின் எழுச்சியை அடக்க முற்பட்ட தலைவர்களில் இவர் தலைசிறந்தவராக திகழ்ந்தார். எனினும், அவர் 1932 ஆம் ஆண்டில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட போதிலும், வயதின் முதிர்ச்சியாலும் இட்லரின் வலிமையான ஆளுமையினாலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இட்லரின் நாசிச கருத்துகளிலும் செயல்களிலும் கொஞ்சமும் விரும்பமில்லாத போதும், பாதுகாப்பு கருதி இட்லரை தனக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என திட்டமிட்டார். இதன் காரணமாகவே 1933 ஆம் ஆண்டு இட்லர் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மற்ற கம்யூனிஸ்ட் அச்சுறுத்தவாதிகளைப் போன்றே இவர்களிடையேயும் ஓர் எச்சரிக்கை உணர்வு இருந்தது. ஆனால் இதன் மூலம் பொதுமக்கள் கருத்தை சற்று உந்துதலுடன் கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்தார். கிண்டன்பர்க்கின் நிலைப்பாட்டால் இட்லர் ஓரளவிற்கு பாதுகாப்புக் கவசமாக செயல்பட்டார். இட்லரால் முற்றிலுமாக அவர் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதால் ஜெர்மன் மக்களின் மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். ஆனால் அது வெகுகாலம் நீடிக்கவில்லை. 1934, ஆகஸ்டு 2 ஆம் நாள் அவர் மறைந்த பின் பாதுகாப்புக் கேடயம் நீக்கப்பட்டது. அதுவே இட்லரின் ஒரு தனிப்பட்ட வலிமையான ஆட்சிக்கு உதவியாக அமைந்தது. கிண்டன்பர்க் இறந்த மறுகணமே இட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார்.நீர் மூழ்கிக் கப்பல்நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகு தொலைவில் செல்லக் கூடிய நீரூர்தி ஆகும். சரி இது எவ்வாறு செயல்படுகிறது? நீர் மூழ்கிக் கப்பலில் வேண்டும் போது நீரை பெருமளவு தேக்கி வைப்பதற்கும் வேண்டாத போது நீரை வெளியேற்றுவதற்குமான சாதனம் பொருத்தப்பட்ட பெரிய அறைகள் (சிலீணீனீதீமீக்ஷீs) உள்ளன. நீர் மூழ்கிக் கப்பலை நீருக்குள் மூழ்கச் செய்ய வேண்டுமானால் இந்த அறைகளுக்குள் நீர் நிரப்பப் படுகிறது. இதனால் இந்த எடை நீர்மூழ்கிக் கப்பல் மிதக்கும் போது வெளியேற்றப்பட்டும். நீரின் உள்ளே எடையை விட அதிகமாக உள்ளதால், அது நீரின் உள்ளே மூழ்குகிறது. நீர் மூழ்கிக் கப்பலை நீர்ப் பரப்புக்குக் கொண்டு வருவதற்கு அறைகளுக்கு நிரப்பப்பட்ட நீர் வெளியேற்றப் படுகிறது. கப்பல் மிதக்கும் போது வெளியேற்றப்படும் நீரின் எடை இப்பொழுது அதிகமாகவோ, சமமாகவோ இருப்பதால் கப்பல் மேலே வந்து மிதக்கிறது.