தமிழகராதியின் தந்தை - தமிழ் இலெமுரியா

15 December 2015 5:14 pm

வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு; மதப்பணியோடு, தமிழ்ப் பணியும் ஆற்றிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி (Constantius Beschi, 1680-1743) என்பவர் மிகச்சிறந்த தமிழ்சீர்திருத்தவாதி ஆவார். 1711, மே 8 ஆம் நாள் மதுரையை வந்தடைந்த இவர், பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழிலக்கண – இலக்கியம் கற்றார். இவர் காலத்து பிற அறிஞர்கள் போல் அல்லாது, தான் இயற்றிய நூல்களில் வடமொழியை இவர் அதிகம் கலக்கவில்லை. அக்காலத்தில் எ-ஏ, கெ-கே, கொ-கோ என்று எழுதும் வழக்கமில்லை. எ, ஓ என்னும் உயிர் எழுத்துகளையும் இவ்வுயிர் எழுத்துகள் ஏறிய மெய்யெழுத்துகளையும் எழுதி, அவற்றின்மேல் புள்ளி வைத்தால் குறிலாகவும் புள்ளி வைக்காவிட்டால் நெடிலாகவும் கொள்வது வழக்கமாக இருந்தது. இவர்தான் அதை மாற்றி, எ-ஏ, கெ-கே, கொ-கோ என்று எழுதும் மரபைப் புகுத்தி, தண்டமிழ் மொழிக்கு அதுவரைக்கும் யாரும் செய்யாத பெருந்தொண்டு செய்து அழியாப் புகழ் பெற்றார்." அதுமட்டுமன்றி, தமிழ் அகராதிகளுக்கெல்லாம் முதல் நூலாக விளங்கும் "சதுரகராதி" இயற்றித் ‘தமிழகராதியின் தந்தை’ என்ற புகழையும் பெற்றார். திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்து மேலைநாட்டுக்கு வழங்கினார். ஐந்திலக்கணங்களையும் கூறும் ‘தொன்னூல்’, தமிழ்ப் பேச்சு மொழியைப் பற்றிய ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ – ஆகியவை இவர் இயற்றிய இலக்கண நூல்கள். அன்று அவர் உருவாக்கிய அடிப்படைதான் பிற்காலத்தில் சான்றோர் பலர் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் தொடர்ந்து ஆய்வு நடத்திடப் பேருதவியாக இருந்தது. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி