தமிழ் அறிஞர்கள் - தமிழ் இலெமுரியா

18 May 2014 7:48 am

தமிழ் அறிஞர்கள்பேராசிரியர் சுந்தரம் பிள்ளை (1855 – 1897) சேர நன்னாடு தந்த செம்மலாம் சுந்தரம் பிள்ளை தமிழ் நாடக இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டு நிலையானதாகும். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்த இவர் 19 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த நாடக நூலான மனோன்மணி"யத்தைத் தமிழுக்கு அளித்துள்ளார். வேறு பல ஆராய்ச்சி நூல்களையும் நூலக இயல் பற்றிய முதல் தமிழ் நூலான "நூற்றொகை விளக்கம்" என்ற அரிய நூலையும் படைத்தவர். இவர் பாடிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல் தமிழ் மக்களிடை மிகப் பரவிய பாடலாகும்."நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்பற்பலர் நின்பெரும் பழம் பணி புதுக்கியும்பொற்புடை நாற்கலிப் புதுப்பணி குயிற்றியும்நிற்பவர் நிற்க நீ பெறும் புதல்வரில்அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்மேயபே ராசையென் மிக்கொள ஓர்வழிஉழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்குஒள்ளிய சிறுவிர பணியாக்கொள்மதி யன்டே குறியெனக் குறித்தே" – (மனோன்மணியம் – பாயிரம்)ரா.இராகவையங்கார் (1870 – 1948) இராமநாதபுரம் அரசவைப் புலவராக விளங்கியவர் ரா.இராகவையங்கார். இராமநாதபுரம் மாவட்டத்தில் தோன்றியவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்று விளங்கியவர். சிறந்த ஆராய்ச்சியாளர். கேட்பார்ப் பிணிக்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். புவியெழுபது, பாரிகாகை போன்ற செய்யுள் நூல்களையும் தமிழ் வரலாறு, வஞ்சி மாநகர் போன்ற ஆராய்ச்சி நூல்களையும் படைத்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் சிறிது காலம் பணியாற்றியவர்.  "இனிமை என்னும் பொருள்படும் தமிழ் என்னும் சொல்லே நம் நாட்டு மொழிகளுள், தொன்மையும் முதன்மையும் பெற்ற இத்தென்னாட்டுத் தாய் மொழிக்குப் பெயராய்ப் பண்டைக்காலந் தொடங்கி வழங்கி வந்ததென்பதற்கு அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் பலவுள்ளன. தமிழ் மொழியில், தமிழ் என்னும் சொற்கு இனிமையென்னும் பொருள் உண்டென்று மேற்கோள் காட்டுமிடனெல்லாம் தமிழ் என்பது இனிமையையுடையவற்றிற்கு அடையாயடுத்து வருதல் காணலாம்" – (தமிழ் வரலாறு)பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் (1881 – 1953) பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் மகிபாலன் பட்டியில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணியாற்றியவர். தமிழும் வடமொழியும் கற்றவர்களில் முதன்முதல் "பெரும் பேராசிரியர்" (மகாமகோபாத்தியாயர்) என்னும் பட்டம் பெற்றவர் இவரே. இவருடைய இலக்கிய நயமும், சமய உணர்ச்சியும் செறிந்த கட்டுரைகள் "உரைநடைக் கோவை" என்னும் நூல் வடிவில் வெளி வந்துள்ளன. "…புன்னுனிப்பனியில் மன்னுமா மலையுருத்துன்னி நின்றொளிர் தரல்போலச் சிற்றளவினவாக்கிய சொற்றொடர்களில் சிறந்தமைந்தனவாகிய பெரும் பொருள்கள் தோன்றித் திகழும் அறமுதனுதலிய திறனமை நூல்களும், அன்பினைந் திணை அகவொழுக்க நேர்மையும், தொடர் நிலைச் செய்யுட்சுவை நலக்கனிவும், குறிக்கோள் பற்றிஒய அறிவியல் நூல்களின் திட்பநுட்ப அமைவும், காதல்மிக்கு ஒதுவார் கேட்பாரது கலினும் வலிய உள்ள நிலையையுங் கரைத்து அவர் தமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கும் இசை நலந்தழீஇய அருட்பாசுரப் பகுதிகளும், இன்னும் பற்பல துறைகளைப் பற்றி நின்று திகழும் நூற்றொகைகளும் தன்பான் மிளிர, இனிமையாங் குணத்தை இயைந்து, தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையப் பெற்று, எல்லாம் வல்ல இறைநிலை போல் என்றும் நின்று நிலவுவது நம்தென்றமிழ் மொழியேயாம்" – (உரைநடைக் கோவை)நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 – 1959) எட்டயபுரத்தில் தோன்றிய நாவலர் வழக்கறிஞர் தொழிலில்தான் முதலில் புகுந்தார்; இருப்பினும் அவர் அத்தொழிலில் நின்றாரில்லை. வழக்கு மன்றங்கள் தவிரக் கம்பர், திருவள்ளுவர், தொல்காப்பியர் முதலிய மன்றங்களிலும் பழகி வந்தார். இப்பழக்கம் அவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்குத் தூக்கியது. சிறந்த சொற்பொழிவாற்றும் திறன் மிக்க இவர்தம் மேடை வழக்கரங்கமாகவே காணப்படும். இவர், மாரிவாயில், திருவள்ளுவர் போன்ற பல ஆராய்ச்சி நூல்களையும் தொல்காப்பியப் பொருளதிகார விளக்கத்தையும் எழுதியுள்ளார். "வள்ளுவரின் குலமும் குடிப்பிறப்பும் நெட்டிடையிருளில் மறைபட்டுத் தெளிதற்கரிதாகும். பண்டைய பெரியோர் பிறப்பனைத்தும் இவ்வாறே தேடரிய முயற்கொம்பாகத் தெரிகின்றோம். நக்கீரர் முதலிய சங்கப் புலவரும், அவர் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட கம்பரனைய கவிவாணரும் தத்தம் நூலளவில் தமிழகத்தே வாழ்வு பெற்றிருத்தலன்றி மற்றப்படி அவர்களின் குலம் குடிகளை விளக்கும் குறிப்புக்களொன்றும் கிடைக்கக் காணேன். காளிதாசன் முதலிய வடமொழி மகாகவிகளும் இப்படியே அவர்தம் நூலளவிலன்றிப் பிறாண்டு நமக்கு ஏதிலராகின்றனர். இறவா அறிவற நூல்களை மட்டும் பேணிப் போற்றுவாரன்றி, அந்நூல் செய்தார் வாழ்க்கைக் குறிப்புகளை நம்மவர் பாராட்டும் வழக்கம் இல்லை" – (திருவள்ளுவர்)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி