11 November 2013 12:13 am
அண்மைக் காலமாக மகாராட்டிரா மாநிலத்தில் அடுக்குமாடிக் கட்டிட இடிபாடுகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மும்பை, தானே பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் 4 அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை சற்றொப்ப 168 பேர். இவ்வாறு இடிந்த கட்டிடங்கள் அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டவை. மிக அதிக விலை கொடுத்து நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் பெறப்பட்டதே இத்தகைய சட்டவிரோத கட்டிடங்கள் உருவானதற்கான மூலக் கரணியங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.