மர்லின் மன்றோ - தமிழ் இலெமுரியா

14 January 2017 7:38 pm

உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் திரைப்பட நடிகையும் பாடகியும் இயக்குநருமான மர்லின் மன்றோ, 1962 ஆகசுடு 5 ஆம் நாள் லாசு ஏஞ்சலிலுள்ள தனது வீட்டின் படுக்கையறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரேதப் பரிசோதகரால் உறுதி செய்யப்பட்டது. 32 வயதையே எட்டியிருந்த உலகப் புகழ்பெற்ற நட்சத்திர நடிகையின் மறைவிற்கு காரணம், தன்னுடைய இரண்டாவது கணவர் பேஸ்பால் விளையாட்டு வீரர் ஜோ டிமாகியோவை மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததுதான் என்றொரு வதந்தியும் உள்ளது. நார்மா ஜீன் மார்டென்சன் எனும் மனவளர்ச்சி குன்றிய ஏழைத் தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் மர்லின் மன்றோ. இவர் காப்பகங்களிலும் அனாதை இல்லங்களிலுமே தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். பின்னர் அவர் ஒரு நவீன புகைப்படக் கலைஞரின் கண்ணில் தென்படவே, அவருடைய புகழ் காலம் தொடங்கிற்று. தனது 20ஆவது வயதில் அமெரிக்காவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ 20 செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார். அந்நிறுவனத்தில் அவர் நடித்த தீ செவன் இயர் இட்ச், ஜென்டில்மேன் பிரிஃபேர் பிளான்ட்ஸ், சம் லைக் இட் காட்" போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து பெரும் இலாபமீட்டியது. இதன் மூலம் அவர் உலகம் முழுவதும் ஒரு கவர்ச்சிகரமான நட்சத்திரமாக உருப்பெற்றார். எனினும் தன்னுடைய தொழில் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்திற்கு ஆட்பட்டார் என்றும் பொன்னிற முடியுடன் (பசுந்தலை பொன்னிற மேனியுடன்) கூடிய ஒரே மாதிரியான நடிப்புப் பாத்திரம் கொண்ட ஓர் ஊமை அழகி என்றும் கருதப்பட்டார். நாடக ஆசிரியர் ஆர்தர் மில்லருடனான தனது மூன்றாவது திருமணமும் தோல்வியடைந்த பிறகு, மன்றோ அமெரிக்க அதிபர் கென்னடி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் காதல் உறவு வைத்திருந்தார். அவருடைய இறப்புக்கு சில மாதத்திற்கு முன்பு, அதிபரின் பிறந்தநாள் குறித்து ஓர் இசையற்ற வாழ்த்துப் பாடலைப் பாடினார். இதுவே அவரது இறுதிப் பொது நிகழ்ச்சியாகும். உலகின் பல நட்சத்திரங்களின் முடிவு விநோதமானது என்பதற்கு மர்லின் மன்றோவும் ஓர் உதாரணம்.தோலின் நிறத்தை மாற்ற முடியுமா?ஒருவருடைய தோல் நிறம் கருமையாக இருப்பதற்கோ, மாநிறமாக இருப்பதற்கோ, சிவப்பாக இருப்பதற்கோ குரோமோசோம்களிலுள்ள மரபணுக்களே காரணமாகும். தோலின் நிறம் மற்ற உடற் பண்புகளைப் போலப் பெற்றோர்களிடமிருந்து பரம்பரை அல்லது மரபு வழியாக வருகிறது. எனவே கறுப்பாயிருப்பவர்கள் அடிக்கடி சோப்பு போட்டுத் தேய்த்துக் குளிப்பதாலோ, மருந்துகள் உட்கொள்வதாலோ, களிம்புகள் பூசுவதாலோ தோலின் நிறத்தை மாற்ற இயலாது. எனினும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில நோய்களாலும் தோல் அல்லது சரும நோய்களாலும் தோலிலுள்ள நிறமிகளின் மாறுபாட்டால் தோல் நிறம் சற்று மாறுபட்டுக் காணப்படும். எடுத்துக்காட்டாக இரத்தப் புற்றுநோய் கண்டால் தோல் வெளிரிப் போகக் கூடும்; மஞ்சள் காமாலையால் தோல் சற்று மஞ்சள் நிறமடையும்; இரும்புச் சத்து அதிகமானால் பழுப்பு நிறமாக மாறலாம். ஆனால் இம்மாற்றங்கள் நிரந்தரமானவையல்ல.நச்சு வாயுக் குண்டுகள்முதலாம் உலகப் போரில் ஜெர்மனியின் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வந்த பிரெஞ்சு இராணுவம் முதன் முதலில் ஆகஸ்டு 1914 இல் நச்சு வாயுக் குண்டுகளை போரில் பயன்படுத்தியது. அன்று முதல் இன்று வரை நச்சு வாயுக் குண்டு பயன்படுத்துவதை அநாகரிகச் செயலாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் பார்க்கப் படுகிறது. எந்தப் பக்கமும் முன்னேறிச் செல்ல இயலாதபடி அமைந்த மறைகுழி போரின் விளைவாக, விட்டுக் கொடுப்பற்ற நிலையை உடைப்பதற்காக பிரெஞ்சு இராணுவம் வாயுக் குண்டுகளைப் பயன்படுத்தியது. இவைகளை முதலில் பயன்படுத்தியது பிரெஞ்சாக இருந்த போதிலும், மறுகணமே ஜெர்மனி மிகப் பெரிய அளவில் இரசாயனக் குண்டுகளை தயாரிக்கத் தொடங்கி விட்டது. 1915 ஏப்ரல் 22 ஆம் நாள் யெப்ரஸ் (சீஜீக்ஷீமீs) மீதான இரண்டாவது போரின் போது பிரெஞ்சு மற்றும் அல்ஜீரியப் படைகளுக்கு எதிராக ஜெர்மனியப் படைகள் நச்சு வாயுக் குளோரின் ஆயுதங்களை ஈடுபடுத்தியது. மஞ்சள், பச்சை நிறங்களைக் கொண்ட இந்த வாயுவை சுவாசித்ததால் சுவாச உறுப்புகள் அடைக்கப் பட்டு மூச்சுத் திணறி பலியாயினர். இதனால் பிரெஞ்சுப் படைகள் அஞ்சி ஓடி விட்டனர். இதன் மூலம் ஜெர்மனி அவர்களின் கட்டமைப்பை நிலைகுலைத்தாலும் நேச நாடுகள் அவற்றை சீரமைத்து கட்டுப் படுத்தினர். நச்சு வாயு பயன்படுத்தியதற்காக ஜெர்மனி உலக நாடுகளால் பரவலாக கண்டிக்கப்பட்டது. இங்கிலாந்து இதற்கு தன் கண்டனங்களைத் தெரிவித்திருந்தாலும் நச்சுக் குண்டுகளைப் பயன்படுத்த இங்கிலாந்தும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம் என்பது உண்மையா?பொதுவாக நாய், பூனை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு நினைவாற்றல் உண்டு. யானைகளுக்கும் இதே போன்று நினைவாற்றல் உண்டு. யானையைப் பற்றிய கதைகளைச் சிறு குழந்தைகளுக்குக் கூறும்போது, அதன் பண்புகளையும் இயல்புகளையும் மிகைப்படுத்தவே அதற்குக் கூர்மையான நினைவாற்றல் உள்ளது எனக் கூறியுள்ளனர். யானை, தன்னைத் துன்புறுத்திய ஒருவரைப் பல ஆண்டுகள் வரையிலும் நினைவில் வைத்திருந்து அவர் எதிர்பட்டால் அவரைத் தாக்கும் என்றும் கூறியுள்ளனர். உண்மையில் அவ்வாறு இல்லை.யானையின் நினைவுக் கூர்மை மற்ற விலங்குகளில் உள்ளது போன்றே இருக்கிறது. காடுகளில் வாழும் முரட்டு யானைகளைப் பழக்கும் போது அவற்றை யானைப் பாகன் பல வழிகளில் அடித்து மிரட்டித் துன்புறுத்தியிருப்பார். இருப்பினும் பழகிய பின், யானைப் பாகனின் ஆணையை எள்ளளவும் மீறாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பதைப் பார்க்கிறோம். வஞ்சம் தீர்க்கும் உணர்வு இருக்குமாயின், யானை அமைதியாக இருக்க வாய்ப்பே இருக்காது. "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி