யானைப் பறவை - தமிழ் இலெமுரியா

21 August 2013 8:16 am

யானைப் பறவை (எலிஃபேண்ட் பேர்டு) என்பது 16 ஆம் நூற்றாண்டில் மடகாசுகரில் காணப்பட்ட ஓர் பறவையினம் ஆகும். இதுவே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. இந்தப் பறவை சற்றொப்ப 10 அடி உயரமும், அரை டன் (500 கிலோ) எடையும் கொண்ட இராட்சசப் பறவையாக விளங்கியது. ஆனால், இந்தப் பறவைகளால் பறக்க முடியாது. இந்தப் பறவையின் எழும்புகளையும், சில முட்டைகளையும் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றைக் கொண்டு இந்த யானைப் பறவை எப்படி இருந்திருக்கும் எனக் கணித்துள்ளனர். சாதாரணமாக அனைத்து பெரிய பறவைகளுமே கறுப்பாகவோ, வெள்ளை நிறத்திலோ அல்லது சாம்பல் நிறத்திலோதான் இருக்கின்றன. எனவே இந்த பறவையும் அந்த நிறங்களில் ஒரு நிறத்தில் தான் இருந்திருக்க வேண்டும்.  யானைப் பறவைகள் மடகாசுகர் பகுதியில் 16 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள். அந்தத் தீவில் இந்தப் பறவைகள் ஏராளமாக வாழ்ந்தன. அங்கு மனிதர்கள் குடியேறிய பிறகு, இந்தப் பறவைகள் எளிதாக வேட்டையாடப்பட்டு, அடியோடு அழிக்கப்பட்டன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி