11 January 2015 5:18 pm
ஜீவாதமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி என்ற ஊரில் 1906 ஆம் ஆண்டில் பட்டன் பிள்ளை என்ற ஏழை உழவருக்கும், உமையம்மை என்ற அன்புத் தாய்க்கும் மகனாகப் பிறந்த இவர், ஏழையாக பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாகவே மறைந்தார். அரசியலில் மட்டுமன்றி சமூகச் சீர்திருத்தத்திலும் இவர் சிறந்த பங்கு கொண்டவராவார். தீண்டாமைக் கொடுமைகளை, வைதீகக் கொடுமைகளை எதிர்த்து நடந்த வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆகியவற்றிலும், 1927 ஆம் ஆண்டில் செங்கல்பட்டில் பெரியார் ஈ.வெ.ரா. நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டிலும் இவர் பங்குகொண்டார். 1930 – 32களில் காந்தியடிகள் தலைமையில் நடந்த சட்டமறுப்புப் போரில் இவர் பங்கெடுத்துச் சிறைசென்றார். 1932 இல் சிறைசென்ற இவர், சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது மார்க்சீயக் கருத்துக்களோடு வெளியே வந்தார். ம.சிங்காரவேலர், பெரியார் ஈ.வெ.ரா. ஆகியோருடன் கலந்து, சுயமரியாதை சமதர்ம திட்டத்தை வகுத்துத் தமிழகமெங்கும் விஞ்ஞான சோசலிசத்தை விளக்கமாகப் பரப்புரைச் செய்தார். 1937 – 39 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரசின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். இவர் ஊருக்கு உழைத்ததுடன் தம் வாழ்விலும் சொன்னதைச் ‘செயலில்’ காட்டியவர். 1947 ஆம் ஆண்டில் இவர் பத்மாவதி அம்மையாரைக் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழ் இலக்கியம் படித்தவர். தமிழ்க் கவி பாடியவர். பல புத்தகங்களை எழுதியவர். முற்ப்போக்கு நாடகங்களை எழுதியவர். இறுதியாக ‘ஜனசக்தி’ ‘தாமரை’ இதழ்களின்ஆசிரியராகவும் விளங்கினார்.முத்துக்குமார்தியாகி முத்துக்குமார் தூத்துகுடி மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள கொளுவை நல்லூரில் 1982 நவம்பர் 19 ஆம் நாள் குமரேசன் - சண்முகத்தாய் இணையருக்கு மூத்த மகனாய் பிறந்தவர். தலைமகன் என்பதால் செல்லங்கொடுத்து வளர்த்தனர். முத்துக்குமாரின் தொடக்க கல்வி தேனியில் தொடங்கியது. வளர வளர முத்துக்குமாரின் உள்ளத்தில் தமிழுணர்வும் வளர்ந்தது. இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு முத்துக்குமாரின் இளம் உள்ளத்தில் ஒரு நெருப்பு விதையாய் விழுந்தது. இளம் பருவத்திலேயே அந்த உள்ளம் தமிழுணர்வால் உழப்பட்டது. பட்டம் பெறாவிட்டாலும் பட்டம் பெற்றவர் படித்திராத நூல்கள் அனைத்தும் படித்து பழுத்தவராவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முன் வரிசைத் தலைவர்களாய் வரலாறு படைத்த கிட்டு, தமிழ்ச் செல்வன், குமரப்பா, புலேந்திரன், திலீபன், மில்லர், தீபன், பால்ராஜ், அங்கயற்கன்னி வரிசையில் முத்துக்குமாருக்கு தனி இடம் உண்டு. ஈழவிடுதலை போராட்டத்தின் ஈடிணையற்ற வரலாற்றுப் பதிவில் முத்துக்குமார் ஈகமும் ஒன்றாகும். மாவீரன் முத்துக்குமார் ஈழத்தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தன் உடலுக்கு தீ மூட்டிக் கொண்டவர். தன் மரண வாக்கு மூலத்தில் நீ எந்த சாதி என கேட்க, நான் தமிழ்ச்சாதி என பதிவு செய்த மறத்தமிழன், தன் உடலை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று தமிழர் படுகொலையை நிறுத்த வேண்டுமென மரண சாசனம் எழுதி வைத்தவர். என் உடலைக் காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும் வீடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தினைக் கூர்மைப்படுத்துங்கள்- (இது முத்துக்குமாரின் கட்டளை)- மு.கண்ணன்