பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் - தமிழ் இலெமுரியா

17 July 2013 12:57 pm

Babasaheb Dr. Ambedkar

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராட்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே எனும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 ஆம் நாள் ராம்ஜி – பீமாபாய் ஆகியோரின் 14 வது குழந்தையாகப் பிறந்தார். டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோபா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்றார். அங்கு அவர் 1915 ஆம் ஆண்டு “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்கிற ஆய்வுக்கு முதுகலைப் பட்டமும், “இந்திய இலாப நோக்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்கிற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கியது. பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் அரச நிதியைப் பரவலாக்குதல்” என்கிற ஆய்வுரைக்கு 1912 ஆம் ஆண்டு முது அறிவியல் பட்டமும், “ரூபாயின் பிரச்சனை” என்கிற ஆய்வுரைக்கு 1923 ஆம் ஆண்டு டிஎஸ்சி பட்டமும் பெற்றார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய டாக்டர் அம்பேத்கர், சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போராடினார். வருணசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956 ஆம் ஆண்டு தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக டாக்டர் அம்பேத்கர் பதவி வகித்தார். அவருடைய தலைமையில் 1950, சனவரி 26 ஆம் நாள் இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் ஒரு பகுதியான “இந்து சட்டத் தொகுப்பு மசோதாவிற்கு”  பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து, தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். 1956 டிசம்பர் 6 ஆம் நாள் சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் இயற்கை எய்தினார். இவர் வாழ்ந்த காலத்தில், இந்தியாவில் இவர் கல்வி கற்ற அளவிற்கு எவரும் கல்வி கற்றதாகச் செய்திகள் அறியப்படவில்லை. 

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி